வெளுத்து வாங்கும் அமைச்சர் விக்னேஷ்! டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்த ஆப்பு! 200 கடைகள் இடமாற்றம்! சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் நிலையில் பல்வேறு அரசு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த கட்சியினர் கூறி வருகின்றனர். குறிப்பாக அரசுக்கு அதிக வருமானம் தரும் டாஸ்மாக் துறையில் கடந்த ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், அதனை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விக்னேஷ் கூறியிருக்கிறார். ஏற்கனவே டாஸ்மாக்கில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மற்றொரு அதிரடிக்கு தயாராகி வருகிறது விஜய் அரசு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

TASMAC Vijay

சொன்னது போலவே டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் 717 மது கடைகளை மூட உத்தரவிட்டார்.

டாஸ்மாக்

இது பெண்களிடைய பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற ஏற்கனவே இருக்கும் விதியை மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த அதிரடியாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது டாஸ்மார்க் நிர்வாகம்.

பாட்டிலுக்கு 10 ரூபாய்

தற்போது பாதிக்கு பாதி டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக பெறப்படுவதில்லை. சில டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கூடுதலாக பணம் பெற மாட்டோம் என வெளிப்படையாகவே அறிவித்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்த விமர்சனங்களும் எழுந்துள்ளது.

டாஸ்மாக் கடைகள்

தமிழக அரசு ஏற்கனவே 717 கடைகள் தவிர்த்து, தற்போதும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகே ஏராளமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் அமைதி அடைவதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தொடர் புகார்கள் அளிக்கப்பட்டது.

200 கடைகள் மூடல்

இதை அடுத்து மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் குறித்து அறிக்கையை தர வேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அரசு அறிவுறுத்தியது. மதுபான உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள், அடிக்கடி புகார் வரும் டாஸ்மாக் கடைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் என கிட்டத்தட்ட 200 கடைகளில் பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த கடைகளை மூடவோ அல்லது இடமாற்றம் செய்யவோ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு தமிழக முதல்வர் விஜய் மூலம் வெளியாகும் என்றும் சொல்கின்றனர் டாஸ்மாக் வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+