4 கான்வாய் வாகனம் மட்டுமில்லை 50+ போலீஸாரும் இல்லை! வெறிச்சோடிய விஜய்யின் நீலாங்கரை வீடு!
சென்னை: தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் (பொறுப்பு) அர்லேகர் அழைக்காத நிலையில் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாகனங்கள் திரும்ப பெறப்பட்ட நிலையில் அவரது நீலாங்கரை வீடு வெறிச்சோடி கிடக்கிறது.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெகவுக்கு 108 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். இதனால் தவெக ஆட்சி அமையும் நிலை இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான போது விஜய் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்ததால் அவரது நீலாங்கரை வீட்டில் ரசிகர்களும் தொண்டர்களும் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியை கொண்டாடினர்.
அது போல் கடந்த 4ஆம் தேதி முதலே விஜய்யின் பாதுகாப்புக்கு கான்வாய் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அவரது கட்சி அலுவலகத்திற்கு மெட்டல் டிடெக்டர் கருவிகள் வைக்கப்பட்டன.
விஜய்யை சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்ய பனையூருக்கு வந்த தவெக எம்எல்ஏக்கள் சோதனைக்குள்படுத்தப்பட்டனர். இதையடுத்து நேரம் ஆக ஆக நீலாங்கரையில் விஜய் வசிக்கும் பகுதியில் வீடு இருப்போரின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததை அடுத்து அதன் பலம் 112 ஆக உயர்ந்தது. இதை வைத்துக் கொண்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார் விஜய்.
அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு 2 வாரம் கால அவகாசம் கொடுக்குமாறும் விஜய் கேட்டார். இதற்கு ஆளுநர் 2 நாட்கள் அவகாசம் தந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் பட்டினம்பாக்கம் இல்லத்தில் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நீலாங்கரைக்கு புறப்பட தயாரானார்.
அப்போது அவருக்கு பாதுகாப்பு வந்த கான்வாய் வாகனங்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி சென்றுவிட்டன. அங்கு பாதுகாப்பு பணிக்காக இருந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும் சென்றுவிட்டனர்.
இதையடுத்து விஜய் தனியாக தனது காரில் ஏறி நீலாங்கரை வீட்டிற்கு வந்தார். அங்கும் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நீக்கப்பட்டிருந்தன.
விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருப்பதால் உயர்மட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் குவிந்த போலீஸார் இன்று இல்லை. இரண்டு நாட்களாக விஜய் வீடு முன்பு பரபரப்பாக இருந்த நிலையில் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications