பல்டி அடித்த எஸ்பிவி.. கடைசி நேரத்தில் காலை வாரிய வைகோ! சட்டசபையில் நடந்தது என்ன? முழு விபரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பரபரப்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், எதிராக 22 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மேலும் பாஜக மற்றும் பாமகவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். தற்போது இந்த வாக்கெடுப்பு குறித்த தகவ்ல்களை சட்டசபை செயலகம் தெளிவாக விளக்கியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டவில்லை. இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டது.

Vijay AIADMK Trust Vote

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்தது. திமுகவுடன் தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளியேறினர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

இதனால் வாக்கெடுப்பு நேரத்தில் அவையில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேரவை விதி 99 உள்விதி 5ன் கீழ் எண்ணிக்கை முறையில் வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவித்தார். அதன் பின்னர் உறுப்பினர்கள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவரின் பெயரும் அழைக்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆதரவு, எதிர்ப்பு மற்றும் நடுநிலை என தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

இந்த வாக்கெடுப்பில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆக இருந்தாலும், முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். மேலும் திருப்பத்தூர் தொகுதி உறுப்பினர் சீனிவாச சேதுபதி நீதிமன்ற உத்தரவால் வாக்களிக்கவில்லை. சபாநாயகர் வாக்களிக்காத காரணத்தால் கணக்கில் 231 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

திமுக வெளிநடப்பு

இதில் மதிமுக உறுப்பினர்கள் இருவரும் அவைக்கு வராத நிலையில், 230 உறுப்பினர்கள் அவையில் இருந்த நிலையில், திமுகவின் வெளிநடப்புக்குப் பின், வாக்கெடுப்பு நடைபெற்றபோது அவையில் 171 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அதில் 144 பேர் ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும், 5 பேர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். இந்த வெற்றியின் மூலம் விஜய் அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த வாக்கெடுப்பு குறித்த தகவ்ல்களை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது.

தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு விவரம்

மொத்தம் சட்டமன்ற உறுப்பினர்கள் - 234

1- (விஜய்) ராஜினாமா
1- திருப்பத்தூர் எம்.எல்.ஏ வாக்களிக்கவில்லை
1- சபாநாயகர்

மீதமுள்ள எண்ணிக்கை -231

மதிமுக 2 எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வரவில்லை

இன்று வந்தவர்கள் 230 எம்.எல்.ஏ.க்கள்

வாக்கெடுப்பின் போது சபையில் இருந்தவர்கள் 171 பேர்

ஆதரவு - 144 பேர்

நடுநிலை -5 ( பா.ஜ.க + பா.ம.க)

எடப்பாடி தரப்பு (எதிர்ப்பு) - 22

எஸ்.பி.வேலுமணி தரப்பு ( ஆதரவு) - 25

வெளிநடப்பு - 58 (தி.மு.க மற்றும் தேமுதிக, கொங்குநாடு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+