மோடிக்கும் விஜய்க்கும் ஒரே மாதிரி ஜாதகம்.. பிரதமர் ஆகும் யோகம் கூட இருக்கு! ரத்தன் பண்டிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி ஜாதகத்தின் ஜெராக்ஸ் காப்பி மாதிரிதான் விஜய் ஜாதகம் உள்ளது. அவர் ஜாதகத்தில் உள்ள எல்லாம் இவர் ஜாதகத்திலும் உள்ளது. மோடிக்கு பிறகு பிரதமராக விஜய் அமர பிற்காலத்தில் வாய்ப்பு உள்ளது. கண்டிப்பாக பிரதமர் மட்டுமின்றி உலகம் போற்றும் தலைவராக விஜய் இருப்பார். விஜய்க்கு தோல்வி முகம் என்று ஒன்று கிடையாது என ஜோதிடர் ரத்தன் பெண்டிட் கூறியுள்ளார்.

தமிழக முதல்​வர் விஜய்​யின் ஜோதிடர் ரத்தன் பண்​டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி​யாக நேற்று முன் தினம் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனை பரிசீலனை செய்வதாக முதல்வர் விஜய் கூறியிருந்தார்.

Vijay Has the Horoscope to Become Prime Minister Says Astrologer Rathan Pandit

பதவி கொடுக்கப்பட்டதே எனக்கு தெரியாது

இந்த நிலையில் விஜய்​யின் ஜோதிடர் ரத்தன் பண்​டிட் வெற்றிவேல், முதல்வரின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசு பதவி வழங்கப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டது குறித்து ரத்தன் பண்டிட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

எனக்கு பதவி கொடுக்கப்ட்டதே முதலில் எனக்கு தெரியாது. பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது எனக்கு வருத்தம் இல்லை. சில நிமிடங்கள் மட்டும் அதிர்ச்சியாக இருந்தது. விஜய்யின் அன்பு வட்டத்தில் இருக்கும் மனிதர் அதுவே எனக்கு போதுமானது. விஜய்க்கு ஜோதிடம் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. ஜோதிடத்திற்காக விஜய் என்னை வெல்கம் செய்வது இல்லை.

அஜித் சாருக்கும் வாய்ப்பு இருக்கு

முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா இறந்த சில மாதங்களில் நான் விஜய் மற்றும் அஜித்தை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். இவுங்க இரண்டு பேரும் அரசாளக்கூடிய யோகம் உடையவர்கள். பயன்படுத்துவதும், பயன்படுத்தாதும் அவர் இஷ்டம். அஜித்திற்கு அந்த அதிர்ஷ்டம் இப்பவும் கூட இருக்கு.. ஆனால் ஜாதகத்தில் அவர் எடுத்துக்கொள்ள மாட்டார்.

2017ல் நான் அணுகிய போது, அஜித் சார் சைடில் இருந்து பெரிய ஆர்வம் இல்லை என்று பதில் வந்தது. நான் நீண்ட காலமாக விஜய் தான் சிஎம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். விஜய் ஜாதகத்தை பொறுத்தவரை போட்டியில்லாமல் அடுத்த 40 - 50 வருஷம் வாழ போகிறார். மத்தியிலும் போவார்.. அதையும் தாண்டுவார். விஜய் பிரதமர் ஆக கூட வாய்பு உள்ளது.

பிரதமர் மோடி ஜாதகத்தின் ஜெராக்ஸ் விஜய் ஜாதகம்

பிரதமர் மோடி ஜாதகத்தின் ஜெராக்ஸ் காப்பி மாதிரிதான் விஜய் ஜாதகம் உள்ளது. அவர் ஜாதகத்தில் உள்ள எல்லாம் இவர் ஜாதகத்திலும் உள்ளது. மோடி 25 வருடம் மூத்தவர். அவர் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு போகும் போது தானாக இன்னொரு அதிர்ஷ்டசாலி அங்கு இருக்க மாட்டார். அப்போது போட்டியே இல்லாத பிரதமராக இவர் ஏன் மாறக்கூடாது.

மோடிக்கு பிறகு பிரதமராக விஜய் அமர பிற்காலத்தில் வாய்ப்பு உள்ளது. கண்டிப்பாக பிரதமர் மட்டுமின்றி உலகம் போற்றும் தலைவராக விஜய் இருப்பார். விஜய்க்கு தோல்வி முகம் என்று ஒன்று கிடையாது" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+