திமுக-வுக்கு நெத்தியடி.. ரமணா பட புள்ளிவிபரம் தந்த விஜய்! 76% மக்கள் நிராகரித்த கட்சியா உங்களுடையது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

ஆனால் இந்த வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் அவரது அரசை கடுமையாக விமர்சித்தார். "தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட அரசு" என்று அவர் கூறியது சட்டசபையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தவெக தலைவரும், முதல்வருமான விஜய் டிவிட்டரில் நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார்.

TVK vijay Politics Vijay Tweet Udhayanidhi Stalin TVK Government DMK Politics Tamil Nadu Assembly Vijay reply to DMK Udhayanidhi Stalin criticism TVK vs DMK Tamil Nadu trust vote Vijay political speech DMK rejected by 76 percent Tamil Nadu assembly debate Vijay tweet viral TVK government majority Tamil Nadu political news Election Commission vote share Vijay CM latest news DMK walkout assembly Udhayanidhi vs Vijay Tamil politics trending vs 76 vs

முதல்வர் விஜயின் ட்விட்டர் பதில்

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு நீண்ட விளக்கம் அளித்தார். "தமிழக மக்களே... நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும்". சில சூழல்களால் வாக்களிக்க இயலாதவர்கள் இப்போது மனம் வருந்துவதாக உணர முடிகிறது என்றும், இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் TVK பெறும் என்றும் உறுதியளித்தார்.

விஜயின் பதிலடி

விஜய் தனது பதிவில் வாக்கு சதவீத கணக்குகளை விரிவாக முன்வைத்தார். தமிழக வெற்றிக் கழகம் 34.92 சதவீதம் (சுமார் 35 சதவீதம்) வாக்குகளைப் பெற்றது. திமுக தனித்து 24.19 சதவீத வாங்குகளளை மட்டுமே பெற்றது.

TVK 1.72 கோடி வாக்குகளைப் பெற்ற நிலையில், திமுக 1.19 கோடி வாக்குகளை மட்டுமே பெற்றது. அதாவது TVK 53 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது என விஜய் தெரிவித்தார்.

"65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி" என்ற உதயநிதியின் விமர்சனத்திற்கு பதிலளித்த விஜய், "அப்படிப் பார்த்தால் திமுக 76 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி" என்று சுட்டிக்காட்டினார்.

"கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட எங்கள் கட்சி, திமுகவை விட 10 சதவீதத்திற்கு மேல் அதிக வாக்கு பெற்றுள்ளது" என கூறிய விஜய், இந்த கணக்கை நாங்கள் சொல்லவில்லை, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவு எனவும் தனது பதிவில் சுட்டிக்காட்டினார்.

2006-இல் திமுக-வுக்கு என்ன நடந்தது?

மேலும் விஜய் தனது பதிவில், பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான தனது பாணியில் சட்டமன்பத்தில் எடுத்து வைத்தார்.

இதை தொடர்ந்து 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, 'தனிப் பெரும்பான்மை பெற்று(?)' அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும் நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பார்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை.

"ஆதரவைக் கடன் வாங்கியவர்கள் யார்?" என்ற கேள்வி

திமுக அரசு மீது கடன் சுமை குறித்த விமர்சனத்தையும் விஜய் முன்வைத்துள்ளார். "மக்கள் மீது கடன் சுமையை ஏற்றி வைத்து அதை வளர்ச்சிக்கான கடன் என்று விளக்கும் திமுக, எங்களை ஆதரவைக் கடன் வாங்கியவர்கள் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் கடும் விமர்சனம்

சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக அரசை "தூய சக்தி" என்று மக்களை ஏமாற்றிய அரசு என்று விமர்சித்தார். மக்கள் தீர்ப்பால் பதவி கிடைக்காத நிலையில், குதிரை பேரம் மற்றும் கூட்டணி அரசியல் மூலம் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

"புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது", "கூவத்தூரையே மிஞ்சும் அளவுக்கு அரசியல் கூத்து நடக்கிறது", "சோபா அரசியல்" என்று சாட்டையான வார்த்தைகளால் தாக்கினார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும் அவர் கூறினார். திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததன் மூலம் இந்த விமர்சனத்தை சட்டசபையில் பிரதிபலித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+