பிரதமர் மோடியின் ராஜயோகம்.. விஜய்க்கும் அப்படியே இருக்கு.. முதல்வராக வருவாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
சென்னை: மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஜோதிட கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. பிரதமர் மோடிக்கு இருக்கும் ராஜ யோகம் விஜய்க்கு இருப்பதாகவும், சொந்த வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டை விடவும் பெரியளவில் நடத்தப்பட்டிருந்தாலும், விஜய் மட்டுமே தவெகவின் முகமாக இருந்து வருகிறார். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் என்ற வாசகம் இடம்பெற்றது. மாநாட்டுக்கு செல்லும் சாலைகளில் விஜய் புகைப்படத்துடன் இதே வாசகம் ஒவ்வொரு பேனரிலும் இடம்பெற்றது.

அதேபோல் முதல்வர் ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்து முதல்வர் வேட்பாளர் ரேஸில் தானும் இருப்பதாக நிறுவிக் கொண்டார். இதனால் திமுக vs அதிமுக vs தவெக என்று களம் மாறிவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால் 2ஆம் கட்டத் தலைவர்கள் கூட இல்லாதது, ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற முனையாதது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் விஜய் முன்பாக இருக்கின்றன.
ஆனாலும் விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டின் முதல்வராக ஒருநாள் வருவார் என்று அக்கட்சியின் தீவிர தொண்டர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் முதல்வராக வருவாரா, ஜாதக அடிப்படையில் அவரின் அரசியல் எதிர்காலம் குறித்து பார்க்கலாம். அதன்படி, விஜய் கடக ராசி, பூச நட்சத்திரத்திற்கு சொந்தக்காரர். இதனால் விஜய்க்கு இப்போது சுக்கிர திசை ஓடிக் கொண்டிருக்கிறது.
விஜய்க்கு 2036 வரைக்கும் சுக்கிர திசை தான். அதேபோல் நீச்ச மக ராஜ யோகம் என்று ஒன்று உள்ளது. பிரதமர் மோடிக்கு எப்படி இருக்கிறதோ, அப்படிதான் விஜய்க்கும் உள்ளது. இந்த யோகத்தில் பிரதமர் மோடிக்கு சந்திரன் நீச்சம்.. செவ்வாய் ஆட்சி என்று இருக்கிறது. இதில் விஜய்க்கு சந்திரன் ஆட்சி.. செவ்வாய் நீச்சம் என்று இருக்கிறது. இவர்களிடம் தான் எப்போதும் அதிகாரம் இருக்கும்.
இந்த ராஜ யோகம் இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய கிரேஸ் இருக்கும் என்று சொல்கிறார்கள். அண்ணாமலைக்கும் கடக ராசி தான். கடக ராசி இருக்கும் அரசியல்வாதிகள் மீது எப்போதும் லைம் லைட் இருக்கும் என்றும் கணித்துள்ளார்கள். தேர்தல் நேரத்தில் விஜய்க்கு குரு புத்தி இருக்கிறது. அந்த நேரத்தில் விஜய் கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல் கடக ராசிக்கு 8ஆம் இடத்தில் ராகு இருப்பதும், 8ஆம் இடத்தில் குரு பார்ப்பதும், விஜய்க்கு தேர்தல் வரை நல்ல பலன் உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி எப்படி அமைந்தாலும், விஜய்யின் தவெகவுக்கு மிகப்பெரிய வாக்கு சதவிகிதம் அமையும் அளவிற்கு தான் ஜாதகம் அமைந்துள்ளது. 2036க்கு பின்னரும் கூட விஜய்க்கு சூரிய திசை. அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
விஜய் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் சொந்த வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன் எப்போதும் சொந்த வாழ்க்கையை மட்டுமே தொந்தரவு செய்யும். ஆனால் வளர்ச்சியை ஒருபோதும் தொந்தரவு செய்யாது. விஜயகாந்த் எப்படி விரைவாக எதிர்க்கட்சித் தலைவராக வந்தாரோ, அதேபோல் விஜய்யும் விரைவாக அரசியல் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று கணித்துள்ளனர்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications