பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்!
சென்னை: என்டிஏ கூட்டணிக்கு விஜய் வந்தால், அதுதொடர்பாக டெல்லி பாஜக தலைமையே முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். விஜய் டெல்லி செல்வதற்கும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய நயினார் நாகேந்திரன், எனக்கு இதுதொடர்பாக எந்த கருத்தும் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதற்கேற்ப நேற்று தவெக மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு தொகுதியில் ரூ.5 கோடி செலவு செய்யும் அளவிற்கு வேட்பாளர்கள் இல்லை என்று மாவட்டச் செயலாளர்கள் புலம்பி இருக்கின்றனர்.

இதனால் கூட்டணி செல்வதே சரி என்றும், மரியாதையான சீட் எண்ணிக்கை மற்றும் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கேட்கலாம் என்று புஸ்ஸி ஆனந்திடம் கூறி இருக்கின்றனர். குறிப்பாக பாஜக கூட்டணிக்கு செல்லலாமா என்ற கேள்விக்கு, சுமார் 98 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே தவெக தலைவர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டிருக்கிறார்.
நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கரூர் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக ஆஜராக இருக்கிறார். இதனால் விஜய்யிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய் டெல்லிக்கு போவதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. விஜய் கூட்டணி வருவதை டெல்லி பாஜக தலைமயே முடிவு செய்யும்.. நான் எந்த கருத்தையும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாகவும் விஜய்யை தொடர்பு கொண்டு பேசுவதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் விஜய்யின் முக்கிய நண்பர்களில் ஒருவரான விஷ்ணு பிரசாத் என்பவர் மூலமாகவும் பாஜக பேசி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் தேர்தல் அறிவிப்பு கொஞ்சம் தள்ளிப் போவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே விஜய் டெல்லி புறப்படுவதற்கு முதல் நாள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications