இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! அடித்து ஆடும் விஜய்! அலர்ட் ஆன திமுக.. தவெகவின் ப்ளான் என்ன?
சென்னை: விஜய் மாணவர்கள் சந்திப்பு மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றதால் உற்சாகத்தில் இருக்கிறது தமிழக வெற்றி கழகம். மேலும் ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் நேரடியாகவே திமுக விஜய்யை அட்டாக் செய்ய இறங்கி இருப்பது ஒருவகையில் விஜயை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதுவரை விஜய் பொருட்டே இல்லை என பேசி வந்த திமுக அவரை எதிர்க்க நேரடியாக களத்தில் இறங்கி இருப்பதால் அடுத்தடுத்து பல அரசியல் அதிரடிகளை அரங்கேற்ற தயாராகி வருகிறது விஜய் தரப்பு.
மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஜய். 2023 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களை சந்தித்து வந்தாலும் இந்த முறை நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்று இருப்பதாக அவர் கருதுகிறார். காரணம் இதற்கு முன்னர் நடிகன் என்ற முறையில் மாணவர்களை சந்தித்த நிலையில் அரசியல்வாதியாக இந்த ஆண்டு மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
அதனை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேச மாணவர்களும் பெற்றோர்களும் விஜய் முன்னிலையில் பதிலடி கொடுத்தனர். கூடுதலாக ஒருவர் ஒத்த சீட்டுக்காக பேசும் தற்குறி என வேல்முருகனை மேடையில் விமர்சிக்க மாணவர்களை விட்டு என்னை விமர்சிக்க வைக்கிறார் விஜய் என வேல்முருகன் கூறியிருக்கிறார்.

விஜய் மாணவர் சந்திப்பு
இதற்கு முன்னர் விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சாதாரணமாக இருந்தது. ஆனால் தற்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருப்பது விஜய்க்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. மேலும் மேடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜயிடம் வாஞ்சையோடு நடந்து கொண்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க விஜயை நேரடியாக எதிர்க்க தொடங்கி இருக்கிறது திமுக.
திமுக விமர்சனம்
இதற்கு முன்னர் விஜய் ஒரு பொருட்டே இல்ல.. களத்திற்கு வர சொல்லுங்கள் என திமுகவினர் கூறி வந்த நிலையில் தற்போது விஜயின் செயல்பாடுகளால் திமுக அதிர்ச்சியில் இருப்பது என்னவோ உண்மைதான் என்கின்றனர். காரணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான மாயவனும் விஜயை சந்தித்து பேசினர். அடுத்த நாள் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் விஜயை சந்தித்து பேசவில்லை என லெட்டர் பேடு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
ஜாக்டோ ஜியோ விவகாரம்
உண்மையில் அது ஜாக்டோ ஜியோவின் லெட்டர் பேடே கிடையாது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். மேலும் மாயவன் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் வீடியோக்களையும் புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு முன்னர் தன்னை ஒரு அரசியல்வாதியாக அங்கீகரிக்காத திமுக தற்போது நேரடியாக எதிர்ப்பதை உணர்ந்துள்ள விஜய் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.
திமுக விஜய் நேரடி மோதல்
அடுத்தடுத்து பல்வேறு விவகாரங்களில் திமுக தலைமையை நேரடியாக எதிர்க்கவும் திட்டமிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த முறை கோவையில் நடைபெற்ற மாநாட்டை போல சேலம், மதுரை, நெல்லை, விழுப்புரம், சென்னை ஆகிய பகுதிகளில் மண்டல அளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் ஏஜென்ட் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதில் பெருவாரியாக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவு பறந்து இருக்கிறது.
விஜய் அடுத்த திட்டம்
அதுமட்டுமல்லாமல் எந்த ஊருக்கு சென்றாலும் அதற்கு அருகில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல விஜய் திட்டமிட்டு இருக்கும் நிலையில் வரவேற்பு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என உத்தரவு பறந்துள்ளது. அது மட்டும் அல்லாமல் சில விஷயங்களில் தானே நேரடியாக இறங்கி போராடவும் விஜய் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, டாஸ்மாக் விவகாரம், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை குறிவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications