தாராபுரத்தில் 40 வயதிற்கு கீழ் இருக்கும் வாக்காளர்கள் 76,000 பேர் தான்.. பீதியில் தவெக! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம் இடைத்தேர்தலில் தொடர்பாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் ஆளும் தவெக தரப்பை கவலை அடைய செய்திருக்கிறது. அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்துள்ள போதும், வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. இதனால் சமூக ரீதியிலான வாக்குகளை திருப்ப முடியாமல் தவெக தடுமாறி வருவதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக சார்பாக மரதகம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுகவைச் சேர்ந்தவர்கள், தவெகவில் இணைந்த உடனே சீட் வழங்கப்பட்டுள்ளதால், தவெகவினரும் கூட அதிருப்தியில் இருக்கின்றனர்.

Vijay

இந்த இரு தொகுதிகளிலும் தவெக வென்றால் மட்டுமே ஆட்சியை எளிதாக நடத்த முடியும். 2ல் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் கூட, அது முதல்வர் விஜய் இமேஜுக்கு வைக்கப்பட்ட செக்காக அமைந்துவிடும். மதுராந்தகத்தில் தவெகவுக்கு சாதகமான அலை வீசினாலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

தாராபுரம் தொகுதியின் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கவுண்டர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால், செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். ஆனால் கவுண்டர் சமூக மக்கள் அவர்களை இதுவரை ஏற்கவில்லை.

கவுண்டர் சமூக மக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். மறுபக்கம் பட்டியல் சமூக வாக்குகளை திமுக பிரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் தாராபுரம் தொகுதியில் மொத்தமாக 2.22 லட்சம் வாக்காளகர்கள் இருக்கின்றனர். அதில் 40 வயதிற்கு கீழ் இருக்கும் வாக்காளர்கள் வெறும் 76 ஆயிரம் தான். சட்டசபைத் தேர்தலிலேயே தவெக சுமார் 46 ஆயிரம் வாக்குகளை தான் வாங்கியது.

அதிமுக சார்பாக போட்டியிட்ட சத்தியபாமா சுமார் 41% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலில் தவெக 40% வாக்குகளை பெற்றால் மட்டுமே வெல்ல முடியும். சட்டசபைத் தேர்தலை விட 17% வாக்குகளை அதிகமாக பெற வேண்டிய தேவை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பட்டியல் சமூக ஆதரவு ஆட்சி என்ற பெயர் தவெகவுக்கு இருக்கிறது.

இதனால் தாராபுரம் தொகுதியில் தவெக கரை சேர முதல்வர் விஜய்யின் பிரச்சாரத்தை மட்டுமே நம்பி இருக்கின்றனர். விஜய்யும் தாராபுரம் தொகுதியை சீரியஸாக எடுத்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எழுந்து வரும் எதிர்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதால், தவெகவினர் நம்பிக்கை இன்றி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+