விஜய்க்கு ‘மெச்சூரிட்டி' இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் வெளியிட்டார். இந்த வேளையில் தவெக தலைவர் விஜயை டிகே சிவக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர், '' விஜய் முதிர்ச்சியடையாத அரசியல்வாதி. அவருக்கு முதிர்ச்சி இல்லை'' என்று காட்டமாக கூறினார். இந்த விமர்சனத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

இதுதொடர்பாக டிகே சிவக்குமார் கூறியதாவது: ''அரசியலில் விஜய்க்கு முதிர்ச்சி இல்லை. அவருக்கு மெச்சூரிட்டி இல்லை. விஜய் உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இருக்கலாம். அவ்வளவு தான். எங்கள் தான் அவருடன் இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் உள்ளது. இந்த கூட்டணி 3ல் இரண்டு பங்கு வென்று மெஜாரிட்டியை பிடிக்கும்'' என்றார்.
டிகே சிவக்குமாரின் இந்த பேட்டிக்கு பின்னணியில் விஜய் சொன்ன ஒரு வார்த்தை தான் உள்ளது. அதாவது விஜய் நேற்று நெல்லை, தூத்துக்குடியில் பரப்புரை செய்தார். அப்போது விஜய் பேசும்போது, '' திமுக கூட்டணியில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் ஓட்டு போட்டுக்கொள்ள மாட்டார்கள் போல் இருக்கிறது.
திமுக தனது கூட்டணியில் காங்கிரஸை வைத்துள்ளது. சில கோடிகளை கொடுத்து அந்த கட்சியை திமுக தக்கவைத்துள்ளது. இருப்பினும் உண்மையான காங்கிரஸ் தமிழக வெற்றி கழக பக்கம் நிற்கிறது" என்று கூறினார்.
விஜயின் இந்த கருத்து பற்றி கேள்வி எழுப்பியபோது தான் டிகே சிவக்குமார் அவரை கடுமையாக சாடி உள்ளார். விஜய் உடன் காங்கிரஸ் கட்சி இல்லை. வேண்டுமானாலும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தவெகவுடன் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது











Click it and Unblock the Notifications