விஜய் தலைமையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை
சென்னை: சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா, பொதுக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பொதுக் குழு கூட்டத்தில் பாஜக, திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார். முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டே நேரடியாக விமர்சனம் செய்தார். மேலும், திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே மட்டும்தான் போட்டி இருக்கும் என்று கூறியிருந்தார்.

மேலும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். கட்சியின் நிர்வாக பணிகளுக்காக அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பூத் கமிட்டிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநில கட்சிகளுக்கு இணையாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் பூத் கமிட்டிகளை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பாகவும், பூத் கமிட்டி மாநாடு தொடர்பாகவும் ஆலோசனை செய்வதற்காக இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.
நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications