Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay: சினிமாலயும் COPY PASTE.. அரசியலிலும் COPY PASTE.. நீங்க ஒரிஜினலா அங்கிள்.. விஜயை பங்கம் செய்த அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் சேலத்தில் திமுக மற்றும் அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இந்நிலையில் விஜய்க்கு அதிமுக அளித்துள்ள பதில், சினிமாவிலும் அரசியலிலும் COPY PASTE uu செய்யும் நீங்கள் எப்படி ஒரிஜினல் ஆவீர்கள். ஓரமா போய் விளையாடுங்க போங்க அங்கிள் என்று விமர்சித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் இன்று சேலத்தில் பிரச்சாரம் செய்தார். கரூர் கூட்ட நெரிசல் துக்கத்தில் இருந்தே மக்கள் வெளி வராத நிலையில், சேலம் தவெக கூட்டத்தில் வட மாநில தொழிலாளி ஒருவர் மயக்கமடைந்து உயிரிழந்தார். மறுபக்கம் விஜய் திமுக மற்றும் அதிமுக பற்றி கடுமையாக விமர்சித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vijay-is-doing-copy-paste-in-both-cinema-and-politics-said-admk

COPY PASTE uu அரசியல்

இதுகுறித்து அதிமுக ஐடி விங் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?. அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க. வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu. அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu...

இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க. திமுக எதில் எல்லாம் அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்பதை எங்கள் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அவரின் ஆணைக்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, 'Action' என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்.

தேங்காய் சில்லுகளை பொறுக்க

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா. கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், 'அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்' என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.

உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள். எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம். எங்கள் முழக்கம் இன்றும் 'அண்ணா நாமம் வாழ்க!' தான்!

ஓரமா போங்க Uncle

நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் 'ரத்தத்தின் ரத்தமான' உடன்பிறப்புகள் தான்! நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் 'அம்மாவின் ஆட்சி'யைத் தான். 'அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்' இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற அம்மா கற்றுத் தந்த அரசியல் பண்போடு தான் எங்கள் பொதுச்செயலாளர் நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.

அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா. அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே?. கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle!" என்று பதிலடி கொடுத்துள்ளனர். இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+