Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தணிக்கை மற்றும் சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இத்திரைப்படம், தற்போது ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 30 ஆகிய தேதிகள் வெளியீட்டிற்கான சாத்தியமான நாட்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜனநாயகன் திரைப்படம்
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் அன்று ரிலீஸ் ஆகவில்லை.
சென்சார் குழுவினர் வேண்டும் என்றே தாமதம் செய்வதாக ஜனநாயகன் படக்குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கே ஒரு மாதத்தை கடந்ததால் அப்போது படம் வெளியாகாமல் போனது. பின்னர் உயர் நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் வாங்கிய படக்குழு, நீதிபதிகள் அறிவுறுத்தியப்படி மீண்டும் படத்தினை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியது.
படம் வெளியாவதில் தாமதம்
ரிவைசிங் கமிட்டி குழுவினரும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வரும் 15 நாட்களுக்கு முன்பே படத்தை பார்ப்பதாக இருந்தது. ஆனால் அன்று தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு பிறகும் படத்தினை ரிவைசிங் கமிட்டி குழு பார்க்கவில்லை. படத்தில் மேலும் சில காட்சிகளை நீக்க கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதன்பின்னர் மும்பையில் செயல்பட்ட ஒரு மறு தணிக்கைக் குழு, படத்தை முழுமையாகப் பார்த்து சில மாற்றங்களைச் செய்ய பரிந்துரைத்தது. விஜய்யின் இந்தத் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகம் இருந்ததே, அதிகாரிகள் இதை மீண்டும் கவனமாகப் பரிசீலிக்க முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் படம் வெளியீடு மேலும் மேலும் தாமதம் ஆனது.
வரும் 24 ஆம் தேதி ரிலீஸ்?
ஜனநாயகன் படம் எப்போது வரும்? எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் கடைசியில் எப்படியும் தேர்தலுக்கு முன்பு வராது என புரிந்துகொண்டனர். இதற்கிடையே தான் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுக்க தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதாலும், ஜனநாயகன் படத்தில் அரசியல் காட்சிகள் அதிகம் இருப்பதாலும் படக்குழு தணிக்கை சான்றிதழ் அளித்தாலும் தேர்தல் ஆணையம் அதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
அனுமதி வழங்கினால் தான் படம் வெளியாக முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை எனவே கூறப்பட்டது. இந்த நிலையில் தான் விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 'ஜனநாயகன்' திரைப்படம் ஏப்ரல் கடைசி வாரத்தில் இறுதியாக திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது. தணிக்கைச் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 30 ஆகிய இரு தேதிகளையும் படக்குழு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
இதனால் நீண்ட நாட்களாக படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இது பெரும் பூரிப்பை கொடுத்துள்ளது. மேலும் கொண்டாட்டத்துக்கு தயாராகும் வகையில் விஜய் ரசிகர்கள் பலரும் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படம் உருவானது. இத்திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
-
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை












Click it and Unblock the Notifications