Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jana nayagan Censor: விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்? யு சான்றிதழ் கேட்கும் படக்குழு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு யு / ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை அது குறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவிக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க ஜனநாயகன் படத்துக்கு யு சான்றிதழை படக்குழு கேட்டதாகவும், ஆனால் படத்தில் மதம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் யு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஜனநாயகன் படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்களாக நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் படம் சொன்னபடி சரியான தேதியில் ரிலீஸ் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இத்திரைப்படம் வரும் 9 ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Vijay Jana nyagan Gets U A Certificate Runtime Locked at 3 Hours 3 Minutes

ஜனநாயகன் திரைப்படம்

சதுரங்க வேட்டை இயக்குனர் ஹெச் வினோத இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

தற்போது வரை படத்தின் 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவும் மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது. பின்னர் சனிக்கிழமை ஜனநாயகன் டிரைய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

யு / ஏ சான்றிதழ், ரன் டைம்

எனினும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. ஜனநாயகன் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக சொல்லப்பட்டது. படத்தின் சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்காத நிலையில், அதனை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவது சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டது.

vijay

சென்சார் சான்றிதழ் கிடைத்தால் தான் படத்தினை திரையிட முடியும் என்பதாலும், இதனால் தியேட்டர்களில் முன்பதிவு செய்ய முடியாத நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் தற்போது ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், படத்தின் நீளம் என்று பார்க்கும் போது 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

எனினும் இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. முன்னதாக தவெகவினர் இந்த விவகாரம் குறித்து செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல் குமார் உள்பட பலரும் குற்றச்சாட்டு வைத்திருந்தனர்.

டிவிகே ரமேஷ் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊடக மற்றும் செய்தித் தொடர்பு அணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கூறுகையில், "பராசக்தி படத்திற்கு ஒரு நீதி? ஜனநாயகன் படத்திற்கு ஒரு நீதியா? இதுதான் உங்கள் சமத்துவ சமூக நீதியா? 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக்குழு (CBFC) சான்றிதழ் வழங்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதைக் கண்டிக்கிறேன். இதற்குப் பெயர்தான் ஒன்றிய, மாநில அரசுகளின் மறைமுகக் கூட்டணி.

ஒரு படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து, கடந்த மாதமே முறைப்படி சமர்ப்பித்த பின்னரும் இன்றளவும் தணிக்கைச் சான்றிதழ் தரவில்லை. இதுதான் உங்கள் ஜனநாயகமா? திரைத்துறை என்பது வெறும் பொழுதுபோக்குக் களம் மட்டுமல்ல, அது சாமானிய மக்களின் வலிகளையும் உரக்கச் சொல்லும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம். ஒரு படைப்பாளி தனது கருத்தைச் சுதந்திரமாகச் சொல்லும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

அரசியல் கருத்து முரண்பாடுகள் இருப்பின் அதை மக்கள் மன்றத்தில் முடிவுக்கு விட வேண்டுமே தவிர, அதிகாரத்தைக் கொண்டு ஒரு படைப்பை முடக்குவது ஜனநாயகப் படுகொலையாகும்.

பலநூறு குடும்பங்களின் உழைப்பு

ஒரு திரைப்படம் உருவாவதற்குப் பின்னால் தயாரிப்பாளர், இயக்குனர் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், கோடிக்கணக்கான முதலீடும் உள்ளது. அனைத்து வேலைகளையும் சட்டப்படி நிறைவு செய்தும் சென்சார் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது பலநூறு குடும்பங்களின் உழைப்பை நசுக்குவதற்குச் சமம்.

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவுப் படங்களுக்கு எளிதாகச் சான்றிதழ் கிடைத்துவிடுகிறது. ஆனால், 'ஜனநாயகன்' போன்ற படங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. எதற்கு இந்த அரசியல் ஓரவஞ்சனை? தணிக்கைக்குழு எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் உடனடியாகச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருந்தார்.

ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுவதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஜனநாயகன் படத்திற்கு யு / ஏ சான்றிதழ் பரிந்துரைத்ததை படக்குழு ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக படக்குழு நீதிமன்றத்தை நாடியுள்ளது. யு சான்றிதழ் வழங்க கோரி தொடுக்கப்பட்ட இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதால் யு சான்றிதழ் கிடைக்காது எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+