ஜனநாயகன் படம் லீக்.. சென்னை ஹைகோர்ட்டில் படக்குழு முறையீடு! நீதிபதி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் முன்பே சட்டவிரோதமாக இணையத்தில் முழு படமும் வெளியாகிவிட்டது. இதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளான ஜனநாயகன் படக்குழு தற்போது இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. முறையாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. விஜய் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக கூறி படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைத்து சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்தது.

ஜனநாயகன் படம் லீக்
இதனை எதிர்த்து படக்குழு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் (யூ/ஏ சான்றிதழ்) வழங்குமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் சான்று வழங்குபடி உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
வழக்கை மீண்டும் விசாரிக்கும் படி உத்தரவிட்டது. இதையடுத்து தனி நீதிபதி முன் விசாரிக்கும் வழக்கினை படக்குழு திரும்பப் பெற்றுக் கொண்டாது. பின்னர் படக்குழு மறு ஆய்வுக் குழுவுக்கு படத்தை பார்க்கும் படி ஜனநாயகன் படத்தை அனுப்பி வைத்தது. இதன்படி சென்சார் போர்டின் மறுஆய்வுக் குழுவில் படம் இருந்து வந்தது. தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்ததால் படம் மே மாதம் முதலில் வெளியாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சட்டவிரோதமாக ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானது.
உயர் நீதிமன்றத்தில் முறையீடு
முதலில் 5 நிமிட காட்சிகள் வெளியான நிலையில், சிறிது நேரம் கழித்து முழு படமும் ஹெச்டி தரத்தில் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். திரை பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் சங்கமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தன. முழு படமும் வெளியான நிலையில் படக்குழு தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் லீக் ஆனது தொடர்பாக படக்குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பாக இந்த விவகாரம் தொடர்பாக முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.
மனுதாக்கல் செய்யப்படுமா?
இதைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி, ஜனநாயகன் படம் லீக் தொடர்பாக முறையாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து படக்குழுவும் மனுவாக தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இன்று படக்குழு மனு தாக்கல் செய்தால், இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications