நாளை "ஜனநாயகன்" மறு தணிக்கை.. முடிவுக்கு வரும் விஜய் பட பஞ்சாயத்து.. அப்போ இந்த மாதமே ரிலீஸா?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' சென்சார் பிரச்சனையால் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது. இதற்கிடையே 'ஜன நாயகன்' படம் நாளை சென்சார் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லாம் சமூகமாக முடிந்தால் 'ஜன நாயகன்' படம் இந்த மாதமே கூட ரிலீஸ் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன்.. இந்த படம் கடந்த பொங்கலன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. அரசியலில் நுழைந்துள்ள விஜய், இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டதால் எதிர்பார்ப்பு எகிறியது. இருப்பினும், உரிய நேரத்தில் படம் சென்சார் ஆகாததால் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகவில்லை.

சிக்கல்
படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி இருந்த சூழலில், படம் வெளியாகாமல் போனது கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்றது. இருந்தாலும் தயாரிப்பாளருக்குச் சாதகமாக எந்தவொரு முடிவும் வரவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் மறு தணிக்கை பிராசஸ் கூட தொடங்கவில்லை. இதனால் இழுபறியே நீடித்து வந்தது.
வாபஸ்
இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் வழக்கை வாபஸ் பெறுவதாக ஜனநாயகன் படத்தைத் தயாரித்த KVN புரொடக்ஷன்ஸ் தெரிவித்திருந்தது. மறு ஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதமே வாபஸ் பெற்றதால் அப்போதே படம் மறு தணிக்கை செய்யப்படலாம் என கூறப்பட்டது. இருப்பினும், மறு தணிக்கைக்கான எந்தவொரு பிராசஸும் நடக்கவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் படம் ரிலீஸ் ஆகாது என்பதில் இதில் குழப்பம் தொடர்ந்தது.
நாளை மறு சென்சார்
இதற்கிடையே 'ஜன நாயகன்' திரைப்படம், நாளை மார்ச் 9ம் தேதி மறு தணிக்கை செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) மறு ஆய்வுக் குழு முன்பு படம் திரையிடப்படும். சான்றிதழ் குறித்து இந்தக் குழு தேவையான முடிவெடுக்கும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் ஜனநாயகன் படம் இந்த மாதமே கூட ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது.
இருப்பினும், விஜய் அரசியலில் இருப்பதால் தேர்தல் அறிவிப்பை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, ஜனநாயகன் சென்சார் ஆகியிருந்தாலும் கூட தேர்தல் முடியும் வரை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால் மறு தணிக்கை எப்போது ஆகிறது.. சென்சார் சான்றிதழ் எப்போது கிடைக்கிறது.. தேர்தல் அறிவிப்பு எப்போது வருகிறது ஆகியவை முக்கியத்துவம் பெறுகிறது.
முக்கியம்
கேஜிஎஃப் புகழ் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 19ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம், இப்போது ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது டாக்ஸிக் பட ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும் இந்த இடைவெளி 'ஜனநாயகன்' படத்திற்குத் தேவையான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எல்லாம் சரியாக நடந்தால் 'ஜனநாயகன்' திரைப்படம் போட்டி இல்லாமல் வெளிவந்து, வசூல் சாதனை படைக்கும்! நாளை மறு தணிக்கை வாரியம் இந்த படத்தில் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை!











Click it and Unblock the Notifications