கன்னியாகுமரியில் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகளை விஜய் கைப்பற்றுகிறார்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்!
சென்னை: கன்னியாகுமரியில் சிறுபான்மை சமூக மக்கள் மட்டுமல்லாமல், அதிமுக - பாஜக கூட்டணியின் வாக்குகளை விஜய் கைப்பற்றுவதாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க மீனவர்கள் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக கூறிய சுவாமிநாதன், விஜய் தனது பலத்தை மட்டுமே நம்பி களத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. காரைக்குடியில் ரோடு ஷோ நடத்திய விஜய், கன்னியாகுமரியில் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அடுத்ததாக திருப்பூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதனால் விஜய் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டின் 3வது பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்று கருதப்படுகிறது. அதேபோல் விஜய் அரசியல் வருகை எந்தக் கட்சியை அதிகம் பாதிக்கும் என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிமுக தரப்பில் திமுகவின் வாக்குகளை விஜய் கைப்பற்றுவார் என்றும், திமுக தரப்பில் அதிமுகவின் வாக்குகளை கைப்பற்றுவார் என்றும் பேசப்படுகிறது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விஜய் வந்த போது, நானும் களத்தில் இருந்தேன். சிறுபான்மையினர் வாக்குகளை மட்டுமல்லாமல், கடந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்கள் கூட இந்த முறை விஜய்க்கு ஆதரவாக மாறியுள்ளார்கள். அதிமுக - பாஜக கூட்டணிக்கு வாக்களித்தவர்களும் விஜய்க்கு வாக்களிக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் விவகாரம், வெளிநாட்டு நிதி விவகாரம் தொடர்பான மசோதா உள்ளிட்டவை தொடர்பாக விஜய் வாய் திறக்கவில்லை தான். ஆனால் களத்தில் இருந்த பார்த்த போது, கத்தோலிக்க மீனவர்கள் விஜய்யை ஆதரிக்கிறார்கள். தவெக மீனவர்கள் தடை கால நிதியை ரூ.20 ஆயிரமாக உயர்த்தும் என்று விஜய் அறிவிக்கிறார். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் நுணுக்கமாக வாக்குறுதியை அறிவிக்கிறார்.
பாஜகவை விஜய் எதிர்க்கவில்லை என்ற வாதம் ஒரு தரப்பிடம் எடுபடுகிறது. தமிழ்நாட்டில் 82% வாக்குகள் பாஜகவுக்கு எதிராக இருக்கிறது. சிபிஐ விசாரணை, ஜனநாயகன் முடக்கப்பட்ட போதும் கூட விஜய் பாஜக பக்கம் செல்லவில்லை. விஜய் தனது பலத்தை மட்டுமே நம்பி களத்திற்கு வருகிறார். விஜய் 18 இடங்களில் வெல்வார் என்பது அபரிவிதமான நம்பிக்கை. விஜய்யால் வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications