விஜய் ஆட்சிக்கு வந்த பின் மட்டும்.. அரசு மதிப்பீட்டை விட குறைவான தொகைக்கு டெண்டர்.. எப்படி நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் முதல்வர் அலுவலக புதுப்பிப்பு பணி ஆகிய இரண்டிலும் அரசு மதிப்பீட்டை விடவும் குறைவாக தொகைக்கு ஜோய் ஆலுக்காஸ் மற்றும் ராசி பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் டெண்டர் எடுத்திருக்கின்றன. விஜய் ஆட்சிக்கு வந்த பின் மட்டும் அரசு நிர்ணயிக்கும் மதிப்பை விடவும் குறைவாக டெண்டர் எடுக்க ஆட்கள் கிடைப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளன.

தவெக ஆட்சிக்கு பின் திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்கள் ஏராளமானவை ரத்து செய்யப்பட்டன. அதேபோல் புதிதாக தவெக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டு வருகின்றன. அண்மையில் 2 முக்கிய டெண்டர்கள் மக்களிடையே பேசுபொருளாகின. முதல் டெண்டர் என்னவென்றால் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்காக டெண்டர் தான்.

Tenders

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராமில் மோதிரம் அறிவிக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்த டெண்டரை 70:30 விகிதப்படி ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்கி இருக்கிறது.

இந்த டெண்டரில் மொத்தமாக 11 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் தங்கம் தவிர, செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், பேக்கிங் மற்றும் காப்பீடு என எல்லாவற்றையும் சேர்த்து, வெறும் ஒரு பைசா மட்டுமே மோதிரம் செய்வதற்கான செலவு என ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருந்தது. மற்ற நிறுவனங்களில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ரூ.410.97, உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் ரூ.822.97 என்று டெண்டர் கோரியது.

வெறும் ஒரு பைசாவில் இந்த டெண்டர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் பெற்றது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தற்போது 2வது டெண்டர் என்னவென்றால், முதல்வர் அலுவலக புதுப்பிப்பு பணிக்கான டெண்டர் ஆகும். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்திற்கு மாற்ற உள்ளனர்.

கடலை பார்த்தவாறு விஜய் அலுவலகம் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ஜோசியர் கொடுத்த ஆலோசனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேசப்படுகிறது. இதற்கான டெண்டர் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே முதல்வர் அலுவலக புதுப்பிப்பு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியது.

இதன்பின் ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு பின் முதல்வர் அலுவலக புதுப்பிப்பு பணிகள் ரூ.5.54 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் பிளாக் 1 ரூ.2.41 கோடி, பிளாக் 2 ரூ.2.01 கோடி மற்றும் பிளாக் 3 ரூ.1.12 கோடி என்று மொத்தமாக ரூ.5.54 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது.

பொதுப்பணித்துறையில் பதிவு செய்த ஒப்பந்தத்தாரர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப டெண்டரில் 5 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் யுடெக் இன்ஜினியரிங் நிறுவனம் தொடக்க நிலையிலேயே தகுதி இழப்பு செய்யப்பட்டது. இதன்பின் ராசி பிஸ்டர்ஸ், ஈஸ்வரி கன்ஸ்ட்ரன்ஷன்ஸ், ஸ்ரீ ராகவேந்திர பில்டர்ஸ், கியூப் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் போட்டியில் இருந்தன.

இதில் ராசி பில்டர்ஸ் நிறுவனம் அரசு மதிப்பீட்டை விடவும் 32% குறைவாக ரூ.3.78 கோடி மட்டுமே பதிவிட்டு டெண்டரை கைப்பற்றியுள்ளது. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விவாதமாகி இருக்கிறது. அரசு மதிப்பீட்டை விடவும் குறைவாக இந்த நிறுவனம் டெண்டர் கோரியது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடர்ந்து, முதல்வர் அலுவலக பணிக்கான டெண்டரும் அரசு மதிப்பீட்டை விட குறைவாக எடுக்கப்பட்டுள்ளது. விஜய் ஆட்சிக்கு வந்த பின் மட்டும் அரசு நிர்ணயிக்கும் மதிப்பை விடவும் குறைவாக டெண்டர் எடுக்க ஆட்கள் கிடைப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளன. இதேபோல் மேம்பால கட்டுமான பணிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் அரசு மதிப்பீட்டை விடவும் குறைவாக நிறுவனங்கள் டெண்டர் எடுக்க முன் வருவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+