மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய்
சென்னை: கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்தார். லஞ்சம் கொடுத்து வேதனை அடைய தேவையில்லை. வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும். ஏஐ உதவியுடன் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் திமுகவின் தேர்தல் அறிக்கையினை விஜய் காப்பியடித்ததாக பதிவிட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரியில் ரோடு ஷோ மேற்கொண்டார். கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரியிருந்தார். காவல்துறை அனுமதி அளித்த போதும் கடைசி நேரத்தில் கன்னியாகுமரி தேர்தல் பிரசார கூட்டத்தை விஜய் ரத்து செய்தார்.

விஜய் அளித்த வாக்குறுதிகள்
வெறும் ரோடு ஷாவாக மட்டும் செல்வார் என்று அறிவிப்பு வெளியானது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமானத்தில் வந்த விஜய், அங்கிருந்து வேன் மூலம் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்றார். கன்னியாகுமரி செல்லும் வழியில் வழி நெடுக விஜய்க்கு உற்சாக வரவேற்பை தவெக தொண்டர்கள் அளித்தனர். கன்னியாகுமரியில் பிரசார பேருந்தில் நின்றபடி பேசிய விஜய், பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.
லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலம் திட்டம் போய் சேரும். இதற்கென ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் privilege கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தை பற்றிய அனைத்து தரவுகளும் அதில் இருக்கும். பிறப்பில் இருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் அவருக்கு ஒவ்வொரு நலத்திட்டமும் போய் சேரும். விண்ணப்பிக்க தேவையில்லை.
சாத்தியமான ஒன்றைத்தான் சொல்கிறேன்
லஞ்சம் கொடுத்து வேதனை அடைய தேவையில்லை. வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும். ஏஐ உதவியுடன் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும். இது ஏதோ ஸ்டாலின்சார் விடும் கதை அல்ல.. அறிவியல் பூர்வமாக சாத்தியமான ஒன்றைத்தான் நான் சொல்லிக்கொண்டு இருகிறேன். அதை நம்ம தவெக ஆட்சி உருவாக்கி காட்டும்.
அதாவது இதுவரைக்கும் அரசின் சிஸ்டத்தில், அரசு அலுவலகத்திற்கு சென்றால், இவுங்களை பாரு.. அவுங்களை பாரு.. இப்ப வா, அப்ப வா.. இந்த ஆவணம் சரி இல்லை.. அதை எடுத்துட்டு வா.. இதை எடுத்துட்டு வா.. என்று இழுத்தடிப்பார்கள். இதற்கு டாக்குமெண்ட்ஸ் இல்லை.. டப்பு டப்பு லஞ்சம்.. இப்படிப்பட்ட ஒரு சிஸ்டம் உள்ளது. இதற்கு பேர் நல்லாட்சி இல்லை.. துன்புறுத்தல், டபுளா வாங்குவது அந்த ஆபிசருக்கு மட்டும் போறது இல்லை. சம்பந்தபப்ட்ட மினிஸ்டருக்கும் ஒரு கட்டு போகுது. அதனால் இதை முதலில் குளோஸ் பண்ணனும்.
உங்கள் மொபைலிலேயே இருக்கும்
பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்க தேவையில்லை. பொதுமக்கள் அனைவரும் அரசின் பங்காளர்களாகவும் இருப்பார்கள். மை வெற்றி தமிழ்நாடு. இன் என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை பொதுமக்களும் உருவாக்கலாம். கொள்கை முன்மொழிவுகளுக்கு வாக்களிக்கலாம். அரசின் சேவைகளுக்கு மதிப்பிடலாம். நிதி நிலை அறிக்கை செலவீனங்களை கண்காணிக்கலாம். மக்கள் நேரடியாக சட்டமன்றத்தில் மனுவை சமர்பிக்கலாம்.
தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் நிறைவேற்றப்படும். வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் சென்ற செயலி உருவாக்கப்படும். அந்த செயலியில் டிரைவிங் லைசன்ஸ், பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, திட்ட கண்காணிப்பு, புகார் பைலிங் வரை அனைத்தும் உங்கள் உள்ளங்கைகளிலேயே இருக்கும். உங்கள் மொபைலிலேயே இருக்கும்.
கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
இதில் எந்த சேவை தாமதம் ஆனாலும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தரகர் என்று எவரும் இல்லை. எவ்வித லஞ்சமும் இல்லை என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். விஜய் அளித்த இந்த சூப்பர் ஆப் வாக்குறுதி திமுக ஏற்கனவே அறிவித்த ஒன்று நெட்டிசன்கள் தவெகவை கலாய்த்து வருகிறார்கள். திமுக தேர்தல் அறிக்கை 89 ஆம் பக்கத்தில் நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் இடம் பெற்ற வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளதவது:-
பொதுமக்களுக்கு அரசிடமிருந்து தேவைப்படும் சேவைகளை எளிமையாகப் பெறும் வகையில் ஒரு பெரும் செயலி (Super App) உருவாக்கப்படும். அனைத்துச் சேவைகளும் உங்கள் விரல் நுனியில் என்ற கனவு இதன் மூலம் மெய்ப்படும்.
இணைய சேவை மேம்படுத்தப்படும்
பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுத்துறைகளிலிருந்து தேவைப்படும் பல்வேறு சேவைகளை எளிமையாக்கிடும் வகையில் 1000 அரசு சேவைகளின் நடைமுறை மாற்றியமைக்கப்படும். சான்றிதழ்கள், தடையில்லாச் சான்று உள்ளிட்ட அனைத்தும் இவற்றுள் அடங்கும்.
சான்றிதழ்களை இணையதளத்திலேயே (Online Certification) பெற்றுக் கொள்ளும் வகையில் அரசின் இணைய சேவை மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையைத்தான் விஜய் அப்படியே காப்பியடித்துள்ளதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
-
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
"விஜய்க்கு உடல்நல பிரச்சனை? ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை" என தகவல்! அதான் பிரச்சாரம் ரத்தாம்! -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.. குமரியில் விஜய் பேச்சு -
ஜனநாயகன் படம் லீக்.. 'அவர்' ஒருவரை தவிர அனைவரும் கண்டிப்பு -
லீக் ஆன ‘ஜனநாயகன்’ பட காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா? விஜய்யிடம் அமீர் கேட்ட கேள்வி! -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
“ஜனநாயகன் லீக்.. அதிர்ச்சியளிக்கிறது!” அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ரஜினிகாந்த் -
விஜய்யை விட பல மடங்கு அதிகம்.. சீமான் அஃபிடவிட்டை டவுன்லோடு செய்தவர்கள் இவ்வளவு பேரா? -
‘ஜனநாயகன்’ லீக் ஆனது தவறு இல்ல.. ஆதங்கத்துடன் நடிகர் சூரி போஸ்ட்.. விஜய்க்கு சப்போர்ட்டுக்கு வந்த விஜய் தேவரகொண்டா -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
கன்னியாகுமரியில் இன்று விஜய் அதிரடி! மதியம் 2 மணிக்கு தொடங்கும் மெகா பிரசாரம்.. ரூட் மேப் இதோ -
Vijay Cycle: காரைக்குடியில் சைக்கிளில் பயணித்த விஜய்! கூட்டத்தில் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு -
கொடுமை.. விஜய்யின் பிரச்சார வாகனத்தை பிடித்து தொங்கிய தொண்டர்கள்.. காலால் மிதித்த பவுன்சர்!













Click it and Unblock the Notifications