நெட்பிளிக்ஸ், யூடியூப், இன்ஸ்டா என ஜாலியாக இருந்த மக்கள்.. நொடிக்கு நொடி நியூஸ் பார்க்க வைத்த விஜய்
சென்னை: ஜியோ ஹாட் ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ், ஜி தமிழ், யூடியூப் என்று ஜாலியாக இருந்த மக்களை தற்போது நொடிக்கு நொடி செய்திகளை பார்க்க வைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். விஜய் ஜெயித்த பின்னர் இதுவரை எதுவுமே பேசவில்லை.. ஆனால் அவரை சுற்றித்தான் அரசியல் இயங்குவதால், அவருக்கு ஓட்டுப்போட்டவர்கள், ஓட்டுப்போடாதவர்கள் என அனைவருமே அவர் ஆட்சியமைப்பாரா இல்லையா என்று பார்க்கிறர்கள்.
இதனால் ஒவ்வொரு வீட்டிலும் செய்தி சேனல்களை நிமிடத்திற்கு நிமிடம் பார்க்கிறார்கள். செய்தி சேனல்களை மட்டுமல்ல.. வலைதளங்களில் வரும் கட்டுரைகளையும், பல்வேறு தியரிகளையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். மூத்த பத்திரிக்கையாளர்களின் பதிவுகளையும் பார்க்கிறார்கள்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 108 இடங்களை வென்றதால் தனிப்பெரும் கட்சியாக இருந்த போதிலும், போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சியமைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவரை பாஜக, அதிமுக கூட்டணி பக்கம் தள்ளி, அவர் பாஜக ஆதரவாளர் என்று பிம்பத்தை உருவாக்க திமுக நினைத்ததிருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திமுக கூட்டணியில் இருந்தே ஒவ்வொரு கட்சியாக உருவி வருகிறார் விஜய். காங்கிரஸ் ஜெயித்த மறுநாளே, ஸ்டாலினுக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல், முதல் ஆளாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆபீஸில் போய் நின்றது. இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை திமுக.

ஏனெனில் திமுக கூட்டணி திடீரென உருவானது அல்ல 2018ல் தொடங்கி 2026 வரை பல தேர்தல்களில் வென்ற கூட்டணி. இப்போது காங்கிரஸ் போய்விட்டது. காங்கிரஸ் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவை வழங்கி உள்ளது. இன்னும் 5 முதல் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். அந்த ஆதரவை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிடம் கேட்கவில்லை.. பாமகவிற்கு 4 இடங்கள் உள்ளன. அமமுகவிற்கு ஒரு இடம் உள்ளது.இவற்றை கேட்டு பெற்றாலே விஜய் சிஎம்ஆக முடியும். ஆனால் விஜய் அவர்களிடம் கேட்கவில்லை.. அதேபோல் அதிமுகவிடமும், பாஜகவிடமும் விஜய் ஆதரவு கேட்கவில்லை.. விஜய் முழுக்க முழுக்க திமுக கூட்டணியை தான் குறிவைத்து செயல்படுகிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வந்துவிட்ட நிலையில், திருமாவளவனின் விசிக இரண்டு இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும் வைத்துள்ளது. இவை திமுக கூட்டணியில் வென்ற இடங்கள். இவர்களிடம் தான் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். இவர்களிடம் ஆறு இடங்கள் உள்ளன. எனவே இந்த சூழலில் 6 இடங்களை சேர்த்தால் 119 வந்துவிடும். இந்த ஆதரவுகிடைத்தால் நாளைக்கே விஜய் சிஎம் ஆவது உறுதி. இது நடக்குமா நடக்காத என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.
இதற்கு நடுவே அதிமுக திமுக கூட்டணி என்று ஊகத்தகவல் காட்டுத்தீயாக பரவியது. விஜய் சிஎம் ஆவதை தடுக்க ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்று சேரப்போவதாக செய்திகள் பரவத்தொடங்கியது. இதனால் மக்களிடையே உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்த தொடங்கி உள்ளார்.
திமுக, அதிமுகவிற்கு எதிரான பல்வேறு பதிவுகள் பரவத்தொடங்கி உள்ளன. ஒவ்வொருவரும் தொலைக்காட்சிகள் முன்பு உட்கார்ந்து கொண்டும் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். திமுக, அதிமுக ஒருவேளை கூட்டணி வைத்தால், விஜய், வலுவான தலைவர் என்பதை அவர்களே அங்கீகரித்து போல் ஆகும் என்பதுடன், மறுதேர்தல் நடந்தால் விஜய்க்கு சாதகமாகும்.. அதுபற்றித்தான் மக்கள் விவாதிக்க தொடங்கி உள்ளார்கள்.














Click it and Unblock the Notifications