நெக்ஸ்ட் சிஎம் விஜய்? டெல்லிக்கு போன நேரத்தில் வெளியான கருத்து கணிப்பு! ப்ளான் பண்ணி பண்ணிய பனையூர்!
சென்னை: தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் குறித்து தான் தற்போது அரசியல் வட்டாரங்கள் அதிகமாகப் பேசி வருகின்றன. குறிப்பாக, அவர் சிபிஐ விசாரணைக்கு செல்லும் முன்பு திடீரென வெளியாகிய கருத்துக் கணிப்பு, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த கருத்துக் கணிப்பில், அடுத்த முதல்வர் போட்டியில் விஜய் முன்னணியில் இருப்பதாகவும், அவருக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டிருப்பது கவனிக்க வைத்துள்ளது. இந்நிலையில், அந்த தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டதாகவும் தகவல்கள் உலாவுகின்றன.
தவெக மற்றும் பாஜக கூட்டணி தொடர்பான தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு பதிலளித்த தவெக தரப்பு, எந்த கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. வாக்காளர்களை குழப்புவதற்காகவே இத்தகைய தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், நேரடியாக திமுக தரப்பை நோக்கி முன்வைத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். நேற்று முன்தினம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணைக்கு விஜய் டெல்லி செல்லும் முன், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
விஜய் பாஜக கூட்டணி
காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்ததுடன், இறுதியில் தலைவர் எடுக்கும் முடிவை ஏற்கிறோம் என்ற நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், விஜய் டெல்லிக்கு செல்லும் நேரத்தில் கூட்டணி குறித்த விவாதம் எழுந்தது, அரசியல் ரீதியாக பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது.
சிபிஐ விசாரணை
குறிப்பாக, விஜய்யை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி மேற்கொள்ளலாம் என்ற பரவலான அரசியல் கணிப்புகளும் வெளியானது. அதேசமயம், இந்த அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரு அரசியல் நாடகம் போலவே கூட்டணி விவாதம் முன்வைக்கப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர். இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற நீண்ட நேர விசாரணைக்கு பிறகு விஜய் வெளிவந்த விதமும் கவனம் ஈர்த்தது. வழக்கத்திற்கு மாறாக புன்னகையுடன் வெளியே வந்த அவர், எந்தவித அழுத்தமும் இல்லாமல் விசாரணையை சமாளித்தார் என்ற எண்ணத்தை உருவாக்கியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கருத்துக்கணிப்பு
இந்த எல்லாவற்றையும் விட அதிகமாக பேசப்பட்ட விஷயம் .. கருத்துக் கணிப்பு. விஜய் விசாரணைக்கு செல்லும் முன்பே வெளியான இந்த கணிப்பு, அரசியல் ரீதியாக திட்டமிட்டு வெளியிடப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பாஜகவுடன் சேரலாம்" என்ற தகவல் வலுப்பெறும் சூழலில், "அவர் தனியாகவே வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் இந்தக் கணிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
மேலும், சிறுபான்மை மற்றும் பட்டியலின வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் சில யூடியூப் சேனல்கள் திட்டமிட்டு தகவல்கள் பரப்புகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் மூலம் அரசியல் மனநிலையை மாற்ற முயற்சி நடைபெறுகிறது என தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் கூட்டணி அமைப்பதில் விஜய்க்கு ஆர்வம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின்றன. தற்போதைய தேர்தலில் தனிப்பட்ட பலத்தை நிரூபித்து, அடுத்த கட்ட அரசியல் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதே அவரது திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
மொத்தத்தில், விஜய்யை மையமாகக் கொண்டு தமிழக அரசியல் களம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. கருத்துக் கணிப்புகள், கூட்டணி வதந்திகள், விசாரணை அரசியல் என எல்லாம் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த சூழ்நிலையில், அடுத்த சில வாரங்களில் வெளியாகும் அரசியல் நகர்வுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 2026 தேர்தலை நோக்கி நகரும் தமிழகம், இன்னும் பல அதிரடி அரசியல் திருப்பங்களை காணும் நிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications