Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடை தெரியாத கேள்விகள்.. விஜய் நினைத்தவுடன் கிளம்ப விமானம் கால் டாக்ஸி அல்ல.. நெட்டிசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் இருந்து சென்னைக்கு ரிடர்ன் சர்வீஸ் திடீரென, திட்டமிட்டதை விட முன்கூட்டியே கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பியது முன்பே திட்டமிட்டதுதானா? நினைத்தவுடன் வண்டியை கிளப்புவதற்கு இது விமான போக்குவரத்தா? அல்லது கால் டாக்ஸியா ? ரயில்வே அல்லது பேருந்து போல் தனிநபர் விமான (Private Charter) பயணம் கிடையாது. ஒரு தனிநபர் விமான பயணம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட வேண்டும் என்று திமுக ஆதரவாளர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக திமுக ஆதரவாளர்களும், தவெக ஆதரவாளர்களும் இணையதளங்களில் கடுமையாக மோதிக்கொண்டிருக்கிறார்கள். தவெக ஆதரவாளர்கள் மிக கடுமையான முறையில் திமுகவை விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக ஆதரவாளர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். திமுக ஆதரவாளராக சோக்ஸ் என்பவர் வெளியிட்ட பதிவினை அப்படியே பார்ப்போம்.

Vijay leaves whenever he wants not a plane or a taxi Netizen

ரயில்வே அல்லது பேருந்து போல் தனிநபர் விமான (Private Charter) பயணம் கிடையாது. ஒரு தனிநபர் விமான பயணம் மேற்கொள்ள, ஒன்றிய பா.ஜ.க அரசின் விமான ஒழுங்குமுறை ஆணையத்தைச் சேர்ந்த Directorate General of Civil Aviation (DGCA) மற்றும் Air Traffic Control (ATC) தரப்பிடம் அனுமதி பெற வேண்டும்.

26 செப்டம்பர் அன்று மதியம் 1:10 மணிக்கு ட்விட்டரில் த.வெ.க வெளியிட்ட அறிக்கையில், 27 செப்டம்பர் அன்று நாமக்கல்லில் காலை 8:45 மணிக்கு பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியது. அப்படி என்றால், அதற்கு முன்னரே த.வெ.க தரப்பில் இருந்து சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் விஜய் செல்ல அனுமதி கேட்டு AAI தரப்பிடம் மனு அளித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் மனுவில் குறிப்பிட்ட நேரம் என்ன என்பது தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. காலை 8:45 மணிக்கு நாமக்கல்லில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 8 மணிக்கு பிறகு தான் விஜய் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தே தனி விமானம் மூலம் திருச்சி செல்ல கிளம்பினார் என்றால், இதில் ஏதோ இடிக்கிறதே!

கூட்டம் நடத்துவதாக சொன்ன நேரம் வேறு!

வீட்டில் இருந்து நடிகர் கிளம்பிய நேரம் வேறு!

உண்மையில், விமானத்தில் கிளம்புவதற்கு திட்டமிடப்பட்ட நேரம் என்ன?

ஒரு வேளை விமானத்தில் செல்வதற்கான நேரத்தை மாற்றி இருந்தால், நாமக்கல் மற்றும் கரூர் கூட்ட நேர மாற்றம் குறித்து ஏன் த.வெ.க முறையாக அறிவிக்கவில்லை?

Vijay leaves whenever he wants not a plane or a taxi Netizen

ரயில் பயணத்தால் தாமதம்

அல்லது

பேருந்து பயணத்தால் தாமதம்

என்பது போல விமான பயணத்தால் தாமதம் என்று போகிற போக்கில் சொல்லிவிட முடியாது!

மொத்தத்தில், திட்டமிட்டு வேண்டுமென்றே காலதாமதம் செய்துள்ளார் விஜய்.

ஏன் காலதாமதம் என்பதை விசாரிக்க வேண்டும். அவரது காலதாமதம் தான் இன்று 41 உயிர்கள் பலியாக காரணம். .

சுருக்கமாக,

1.தனி விமான புறப்பாடு நேரம் எப்போது திட்டமிடப்பட்டது?

2.விமான புறப்பாடு நேரமும், பிரச்சார கூட்ட நேரமும் ஏன் பொருந்தவில்லை?

3.விமான புறப்பாடு நேரம் மாற்றப்பட்டிருந்தால், அதைப் பற்றி த.வெ.க பொதுமக்களிடம் ஏன் தெரிவிக்கவில்லை?

4.உண்மையில் உறுதி செய்யப்பட்ட விமான நேரம் என்ன? யாரால் தாமதம் ஏற்பட்டது?

4.காலதாமதம் த.வெ.கவின் தவறா? இதற்கு ஒன்றிய பா.ஜ.க அரசும் உடந்தையா?

5. திருச்சியில் இருந்து சென்னைக்கு ரிட்டர்ன் சர்வீஸ் திடீரென, திட்டமிட்டதை விட முன்கூட்டியே கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பியது முன்பே திட்டமிட்டதுதானா? நினைத்தவுடன் வண்டியை கிளப்புவதற்கு இது விமான போக்குவரத்தா? அல்லது கால் டாக்ஸியா ?" இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+