பிரபல ரவுடி படப்பை குணா கூட்டாளியான விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தென்னரசு கைது
சென்னை: பிரபல ரவுடி படப்பை குணாவின் கூட்டாளியும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகியுமான தென்னரசு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு நிறைய முறை சிறைக்கு சென்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி மாணிக்கம் என்பவர் கடையில் இருந்த போது படப்பை குணா அவரது கூட்டாளிகளான போந்தூர் சிவா மற்றும் போந்தூர் சேட்டு ஆகியோருடன் சென்றுள்ளார்.

அடித்து பறித்த பணம்
அப்போது குணா, இந்த இடத்தில் கடை நடத்த ரூ 50 ஆயிரம் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என மாணிக்கம் கூறிய நிலையில் கடைக்கு தேவையான பொருட்களை வாங்க பாக்கெட்டில் வைத்திருந்த 20 ஆயிரத்தை குணா எடுத்தார். அதை கொடுத்துவிடுமாறு குணா கேட்டும் மாணிக்கம் கொடுக்காமல் மறுத்ததால் கத்தியால் அவரது கையில் கிழித்துவிட்டு குணா பணத்துடன் சென்றுவிட்டார்.

மதுரமங்கலம் போலீஸ்
இதுகுறித்து மாணிக்கம் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த படப்பை குணா, சிவா, சேட்டு ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இதையடுத்து மதுரமங்கலத்தில் பதுங்கியிருந்த சிவாவை போலீஸார் கைது செய்தனர். முக்கிய ரவுடியான படப்பை குணா பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வருகிறார்.

விஜய் மக்கள் இயக்க தலைவர்
இந்த நிலையில் படப்பை குணாவின் கூட்டாளியான காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தென்னரசு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அரசு ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரவுடியின் மைத்துனரும் கைது
விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் தென்னரசு, போந்தூர் சிவாவுக்கு மிகவும் நெருக்கமானவர். போந்தூர் சிவா படப்பைகுமாருக்கு வலது கரமாக செயல்பட்டு வந்தவர். படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளின் அண்ணன் திருநாவுக்கரசு என்பதையும் இந்த வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ










Click it and Unblock the Notifications