Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் பசிபோக்கும் விஜய் மக்கள் இயக்கம்.. தமிழ்நாடு முழுக்க பசியாறிய ஏழை மக்கள்.. அசத்திய ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் ஆணைக்கிணங்க, இன்று தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு இலவச மதிய உணவை வழங்கினர் விஜய் மக்கள் இயக்கத்தினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, மே 28ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக ஒருநாள் மதிய உணவு வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

Vijay makkal iyakkam cadres provides free food for public today

உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதியான இன்று "உலக பட்டினி தினம்" அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த 25ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்கப்படும், 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' என்ற திட்டம் மூலம் உலக பட்டினி தினமான மே 28ஆம் தேதி காலை 11 மணி முதல் இலவச மதிய உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.

Vijay makkal iyakkam cadres provides free food for public today

அறிவித்தபடி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர். பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட இந்த மதிய உணவை பொதுமக்கள் பலரும் வாங்கி பயன் பெற்றனர்.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் நீலாங்கரை பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 52 இடங்களில் இன்று இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கிச் சென்றனர்.

Vijay makkal iyakkam cadres provides free food for public today

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கினர். தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மக்கள் பசி போக்கும் விஜய் மக்கள் இயக்கம் என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள், ஏழைகளுக்கு இலவசமான உணவு வழங்கும் வீடியோக்களைப் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர். உணவை உண்டு பசியாறிய மக்கள், விஜய் மக்கள் இயக்கத்தினரை வாழ்த்திச் சென்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+