”சி.ஜோசப் விஜய் எனும் நான்” 100 நாள் ஆட்சி.. ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி! சிறப்பு வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இந்த நிலையில் 'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என சிறப்பு வீடியோவை தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகார பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முதல்வர் விஜய். அதில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன.

Vijay tvk tn govt

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது தவெகவின் பலம் 107 ஆக இருந்தது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கையை எட்டுவதற்கான பலம் இல்லை.

சி.ஜோசப் விஜய்

இதனையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்களோடு விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத் தொடர்

தற்போது தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றின் மீதான விவாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் தொடங்குகிறது. அதே நேரத்தில் மிக முக்கியமாக இன்று தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம்

இதையடுத்து முதல்வர் விஜய்க்கும், அவரது அரசுக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கடந்த மே பத்தாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவி ஏற்ற நிலையில் இடைப்பட்ட இந்த காலத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசின் 100 நாள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

விஜய் 100 நாள் ஆட்சி

"100 நாள் ஆட்சி.. ஒரு யுகத்துக்கான மக்களின் மனசாட்சி" என்ற தலைப்பில் அந்த வீடியோவில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. அவற்றில் முக்கியமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ரூ.560 கோடி ஒதுக்கீடு, வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 - ரூ.1 லட்சம் கோடி முதலீடு, 717 மதுபானக் கடைகள் மூடல், வெற்றித் திறன் பயிற்சித் திட்டம் 12 லட்சம் மாணவர்களுக்கும், 1 லட்சம் இளைஞர்களுக்கும் திறன் பயிற்சிகள் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

அண்ணனின் சீர்

மேலும், TN-VETTRI (கிராமப்புற மறுமலர்ச்சி) சுகாதாரம், குடிநீர், சாலைகள் மேம்படுத்த ஆண்டிற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு, போதைப் பொருள் ஒடுக்குவதற்கான 65 சிறப்பு அதிரடிப்படைகள், அண்ணனின் சீர் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் ரூ.812 கோடி ஒதுக்கீடு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்கத்தொகை, வெற்றி வீடு திட்டம் ரூ.3,500 கோடி ஒதுக்கீடு, வெற்றி 150 -150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

வெற்றி மடிக்கணினித் திட்டம்

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் ரூ.710 கோடி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, வெற்றி மடிக்கணினித் திட்டம் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் 11-ம் வகுப்புப் பயிலும் மாணாக்கர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள், வெளிப்படையான & நேர்மையான நிர்வாகம் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு CMDA அளவிலேயே திட்ட அனுமதி, நேரடி தொடர்பற்ற பத்திரப் பதிவு" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+