ரஜினி, கமல், விஜயகாந்தால் முடியாத மேஜிக்.. திமுக, அதிமுகவை அதிர வைத்த விஜய்யின் 'மாஸ்டர் பிளான்'

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 4 ஒரு மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று ஒட்டுமொத்த இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எம்ஜிஆர், என்டிஆர் வரிசையில் ஒரு சினிமா நட்சத்திரம் நேரடியாகப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப் போவது இந்த நூற்றாண்டில் இதுவே முதல் முறையாக இருக்கலாம். ரஜினி, கமல், விஜயகாந்த் எனப் பல ஜாம்பவான்களால் முடியாத ஒன்றை விஜய் எப்படிச் சாதித்தார்? திராவிடக் கட்சிகளின் கோட்டையை அவர் தகர்த்தது எப்படி?

Vijay

கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு துருவங்களை உடைப்பது என்பது எவருக்கும் முடியாத காரியமாக இருந்தது. பல தேசியக் கட்சிகளே திணறிய நிலையில், விஜய் தனது உச்சகட்ட சினிமா வாழ்வில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்தபோது பலரும் அவரை ஒரு "சீசன்" அரசியல்வாதியாகவே பார்த்தனர். ஆனால், இன்று 100 இடங்களைத் தாண்டி அவர் முன்னிலை பெற்று இருப்பது, ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் ஆகிய மூவராலும் எட்ட முடியாத உயரமாகவே கருதப்படுகிறது.

முதலில் ரஜினிகாந்தை எடுத்துக் கொண்டால், சுமார் 25 ஆண்டுகளாக அவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் 2020 இல் பின்வாங்கினார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி சில தேர்தல்களைச் சந்தித்தாலும், அவரது செல்வாக்கு நகரப்புறங்களோடு நின்றுவிட்டது. இப்போது அவர் திமுக கூட்டணியில் ஒரு நட்சத்திரப் பேச்சாளராக மாறிவிட்டார். விஜயகாந்த் 2006 இல் 8 சதவீத வாக்குகளைப் பெற்று, 2011 இல் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தாலும், பின்நாட்களில் கூட்டணி அரசியலில் சிக்கி அவரது கட்சி மெல்ல மெல்ல வலுவிழந்தது.

ஆனால் விஜய் இந்த மூவரிடம் இருந்தும் மாறுபட்ட ஒரு வியூகத்தைக் கையாண்டார். ரஜினியைப் போலத் தாமதிக்காமல், 2024 இலேயே கட்சியைத் தொடங்கி நேரடியாக 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்கு வைத்தார். கமலைப் போல நகரப்புறங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், கிராமம் மற்றும் நகரம் என இரண்டையும் இணைக்கும் நலத்திட்டங்களை அறிவித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, விஜயகாந்தைப் போல எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் "தனி ஒருவனாக" களம் கண்டார். திராவிடக் கட்சிகளுக்கு ஒரு நேரடி மாற்றாகத் தன்னை முன்னிறுத்தியதுதான் விஜய்க்கு இந்த 100-க்கும் மேற்பட்ட இடங்களைக் கொடுத்துள்ளது.

குறிப்பாக 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் விஜய்க்குப் பெரிய பலமாக மாறியுள்ளன. 2026 தேர்தல் முடிவுகள் காட்டுவது என்னவென்றால், தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை விரும்பியுள்ளனர். அந்த மாற்றத்தின் முகமாக விஜய் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+