Exclusive: 13 வருடத்திற்கு பின் மீண்டும்.. உதயநிதியை அழைத்த விஜய்?.. திடீரென ஜோடி சேர்வது ஏன்?
சென்னை: நடிகரும் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் விஜய் போன் மூலம் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சினிமாவில் பிசியாகி உள்ளார். தேர்தல் நேரத்தில் படத்தில் நடிக்காமல் இருந்தவர், தேர்தலுக்கு பின் தனது தொகுதியில் தினமும் விசிட் அடித்து மக்களை கவனித்து வந்தார்.
சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். ஏற்கனவே கமிட் செய்திருந்த படங்களில் உதயநிதி மீண்டும் நடிக்க தொடங்கினார்.

ரெட் ஜெயிண்ட்
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்கி உள்ளது. பெரிய ஹீரோக்களை வைத்து ரெட் ஜெயிண்ட் பல்வேறு படங்களை தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. வரிசையாக பல படங்களை வெளியிடவும். ரிலீஸ் உரிமையை வாங்கவும் அந்த நிறுவனம் முயலும் என்கிறார்கள்.

விஜய்
இந்த நிலையில்தான் நடிகரும் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் விஜய் போன் மூலம் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் குறித்து இவர்கள் பேசியதாக தகவல்கள் வருகின்றன. சினிமா வட்டாரத்தில் விசாரித்த வரையில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் படம் நடிக்கும் விருப்பத்தில் விஜய் இருப்பதாக தெரிகிறது.

முடிவு
அந்த நிறுவனமும் விஜய்யை வைத்து பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்கும் என்றும் கூறுகிறார்கள். ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் 2008ல் விஜய் குருவி படத்தில் நடித்தார். இந்த ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தை அப்போது உதயநிதி ஸ்டாலின் தொடங்கவே விஜய் கொடுத்த ஐடியாதான் காரணம் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் அதன்பின் இவர்கள் இணைந்து படம் எடுக்கவில்லை.

மீண்டும்
இந்த நிலையில் 13 வருடங்கள் கழித்து விஜய் உதயநிதி ஸ்டாலினை அழைத்து படம் தயாரிப்பது குறித்து பேசி இருக்கிறாராம். இதற்காக முன்னணி இயக்குனர் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். கதை செட்டாகும் பட்சத்தில் உதயநிதி தயாரிப்பில் விஜய் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தளபதி
சட்டசபை தேர்தலின் போது விஜய் கருப்பு, சிவப்பு சைக்கிளில் வாக்களிக்க வந்தது பெரிய அளவில் விவாதம் ஆனது. அதேபோல் விஜய் பிறந்த நாளின் போது உதயநிதி அவருக்கு தளபதி என்று கூறி வாழ்த்து தெரிவித்தார். விஜய் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டின் போது திமுக விஜய்க்கு ஆதரவாக பேசி இருந்தது. இந்த நிலையில்தான் இத்தனை வருடங்கள் கழித்து உதயநிதி தயாரிப்பில் விஜய் நடிக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications