விருகம்பாக்கம் தொகுதியில் விஜய் போட்டி? தலைநகரை குறி வைத்து தவெக போடும் மாஸ்டர் பிளான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தொகுதி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய், தலைநகரில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. விஜய், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக பனையூர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. கூட்டணி பேச்சுகள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதனை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகத்துடன் தங்களது சின்னத்தை மக்களிடம் ஒன்று சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. தவெக தலைவர் விஜய், தலைநகர் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பனையூர், நீலாங்கரையில் தான் விஜய் இருப்பார் என்பதால் சென்னை மண்டலத்தில் உள்ள தொகுதியில் போட்டியிடுவதே சரி என நினைகிறாராம்.
ஆளுங்கட்சியான திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சென்னையை முழுமையாக கைப்பற்றியது. தலைநகரில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக வாரிச் சுருட்டியது. சென்னையில் திமுக வொயிட்வாஷ் செய்த நிலையில், அதில் சிக்கலை ஏற்படுத்த தவெக தலைவர் விஜய் தயாராகி வருகிறாராம். தலைநகரில் ஆதிக்கத்தைக் காட்ட திட்டமிட்டுள்ளாராம்.
சென்னை நகரை பொறுத்தவரை கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதேசமயம் இதில் விருகம்பாக்கம் தொகுதியில் இது உறுதி இல்லை என்கிறார்கள். விருகம்பாக்கம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ பிரபாகர ராஜாவிற்கு பதிலாக தணிக்கை குழு தலைவர் தனசேகரனுக்கு வாய்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த விருகை வி.என். ரவி மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விருகம்பாக்கம் தொகுதியைப் பொறுத்தவரை பூர்வகுடி மக்களை விட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கும் தொகுதி.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய், சிறுவயதில் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தான் வளர்ந்தார். சினிமாவில் வெற்றிகரமான ஒரு ஹீரோவாக வளரும் வரை அந்த வீட்டில் தான் இருந்தார். இதனால் சென்டிமெண்டாக சாலிகிராமம் பகுதி இடம்பெற்றுள்ள விருகம்பாக்கம் தொகுதி தனக்கு வெற்றியை தரும் என்று நினைக்கிறாராம் விஜய்.
மேலும், பல்வேறு சினிமா பரபலங்களும் விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் வடபழனி பகுதியைச் சுற்றித்தான் உள்ளனர். சினிமா துறையின் சிறு தொழிலாளர்கள், முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் இங்கு தான் வசிக்கின்றனர். இதுவும் விஜய்க்கு கூடுதல் வாக்குகளை பெற்று தரும் என்று கூறப்படுகிறது. எனவே, தலைநகரின் விருகம்பாக்கம் தொகுதியில் விஜய் போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் பரபரக்கின்றன. தலைநகரில் வெல்வதன் மூலம் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் வெற்றிக்குறி காட்டவும் விஜய் தயாராகி வருகிறாராம்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்!












Click it and Unblock the Notifications