Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக-பாஜக-தவெக கூட்டணி.. வந்தாலும் திமுகவிற்குதான் வெற்றி! சர்வேயை பார்த்து.. விஜய் எடுத்த முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக - தவெக இடையே கூட்டணி வந்தாலும் அது விஜய்க்கு சாதகமாக இருக்காது.. ஆளும் திமுகவிற்கே சாதகமாக இருக்கும் என்று வெளியான சர்வே ஒன்று தமிழக வெற்றிக் கழகம் தரப்பை யோசிக்க வைத்துள்ளதாம். என்டிஏ கூட்டணியில் இணையலாமா? அல்லது அதிமுகவுடன் மட்டும் தனியாக கூட்டணி வைக்கலாமா? என்று விஜய் தீவிர ஆலோசனை செய்து வருகிறாராம்.

விஜய் - அதிமுக இடையே கூட்டணி அமைவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார்.

TVK Vijay

விஜய் - அதிமுக - பாஜக கூட்டணி

குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

யோசிக்கும் விஜய்

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக - பாஜக - தவெக இடையே கூட்டணி வந்தாலும் அது விஜய்க்கு சாதகமாக இருக்காது.. ஆளும் திமுகவிற்கே சாதகமாக இருக்கும் என்று வெளியான சர்வே ஒன்று தமிழக வெற்றிக் கழகம் தரப்பை யோசிக்க வைத்துள்ளதாம். என்டிஏ கூட்டணியில் இணையலாமா? அல்லது அதிமுகவுடன் மட்டும் தனியாக கூட்டணி வைக்கலாமா? என்று விஜய் தீவிர ஆலோசனை செய்து வருகிறாராம்.

பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறி வருகிறார். அவர்களுடன் முதல் தேர்தலே கூட்டணி வைத்தால் விஜய் அரசியல் முடிவிற்கு வரும். பாஜகவின் மத ரீதியிலான அரசியல் விஜய் முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலுக்கு பெரிய சிக்கலாகும். விஜய் தலித், கிறிஸ்துவர்கள் வாக்குகள் குறி வைக்கிறார். ஆனால் அவர் பாஜக உள்ள கூட்டணிக்கு சென்றால் அது விஜய்க்கு சிக்கலாகும்.

விஜய் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால்.. பாஜக கூட்டணியை முறித்துவிட்டு வாருங்கள் என்று எடப்பாடியிடம் கூற வேண்டும். இதை எடப்பாடி ஏற்பாரா.. டெல்லி பாஜக அனுமதிக்குமா? என்ற கேள்வி உள்ளது. விஜய்க்கு இருக்கும் பெரிய சவாலே இதுதான். விஜய் இதை எப்படி சமாளிப்பார்.. என்ன மாதிரியான முடிவுகளை இதில் எடுப்பார் என்ற பெரிய கேள்வி நிலவி வருகிறது.

திமுக எடுத்த சர்வே பின்னணி

ஆளும் திமுக ரகசியமாக நடத்திய கருத்துக் கணிப்பின்படி, நடிகர் விஜய் அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

தி பிரிண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள இந்த செய்தியில், ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால் 23 சதவீத வாக்குகளைப் பெறும் என திமுக தரப்பு நடத்திய உட்கட்சி சர்வே கணித்துள்ளது. இந்த ஆய்வின்படி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வலுவான ஆதரவு இருப்பதும், திமுக-வுக்கு ஒரு முக்கிய போட்டியாளராக அந்த கட்சி மாறக்கூடும் என்பதும் தெரிய வந்துள்ளது. 2.91 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 1,245 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் தவெக ஆகிய கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால், திமுக 50 சதவீத வாக்குகளையும், என்.டி.ஏ 35 சதவீத வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி (என்.டி.கே) 12 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 3 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என இந்த ரகசிய ஆய்வு குறிப்பிடுகிறது.

பா.ஜ.க, அ.தி.மு.க, தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 35 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், அ.தி.மு.க-வில் உள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை தமிழக வாக்காளர்கள் எதிர்க்கும் போக்கு ஆகியவை இக்கூட்டணியின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்றும் சர்வே கூறுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையில், திமுக-வின் வாக்கு சதவீதம் 45 ஆக குறையலாம். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி 22 சதவீத வாக்குகளையும், விஜயின் கட்சி 23 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு 5 சதவீதமாகக் குறையக்கூடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இணையலாமா அல்லது பாஜக அல்லாத அதிமுக கூட்டணியில் இணையலாமா என்று விஜய் யோசித்து வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+