ராஜ்பவன் கூப்பிட்டு.. விஜய்யை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆளுநர்! லோக் பவன் சொன்ன விளக்கம்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து பேசினார். ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே விஜய் ஆளுநர் மாளிகை சென்றதாக சொல்லப்படும் நிலையில் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், விஜய்க்கு இருக்கும் ஆதரவு, பெரும்பான்மையை எப்படி நிரூபிக்க போகிறீர்கள் என பல கேள்விகளை ஆளுநர் கேட்ட நிலையில் அதற்கான பதிலை விஜய் சொன்னதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஆளுநர் தரப்பில், தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் இல்லை. இதன் காரணமாகவே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
அப்படி ஒரு மகத்தான சாதனையை செய்திருக்கிறது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் தேர்தலை சந்தித்தார் கட்சி இரண்டு பேரும் திராவிட கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், பெரும்பான்மை பெற இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது. தற்போதைய சூழலில் குறைந்தது 10 முதல் 11 உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
113 எம்எல்ஏக்களின் ஆதரவு
இதற்காக பல கட்சிகளுடன் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. முதல் வாய்ப்பாக பார்க்கப்பட்டது காங்கிரஸ். 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட இந்தக் கட்சி, ஆட்சியில் பங்கு மற்றும் அமைச்சரவை வாய்ப்பை கருத்தில் கொண்டு ஆதரவு தரும் என அறிவித்துள்ளது. தற்போதைய சூழலில் விஜய்க்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் விஜய் எந்த சிக்கலும் இன்றி ஆட்சி அமைக்கலாம்.
ஆளுநருடன் சந்திப்பு
இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரை நேற்று சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார். இந்த நிலையில் பெரும்பான்மை இல்லாததால் விஜயை ஆட்சி அமைக்க அழைக்க முடியாத சூழல் இருப்பதாக ஆளுநர் கூறியதாக தகவல் வெளியாகி வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது.
அதிமுக - திமுக கூட்டணி
நேற்று அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைக்கலாம் எனவும் வெளியான கருத்து பொதுவெளிகளில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநரை சந்தித்து பேசினார். ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே விஜய் ஆளுநர் மாளிகை சென்றதாக சொல்லப்படும் நிலையில் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக சொல்லப்படுகிறது.
ஆளுநர் கேள்வி
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், விஜய்க்கு இருக்கும் ஆதரவு, பெரும்பான்மையை எப்படி நிரூபிக்க போகிறீர்கள் என பல கேள்விகளை ஆளுநர் கேட்ட நிலையில் அதற்கான பதிலை விஜய் சொன்னதாக சொல்லப்படுகிறது. 40 நிமிடங்களுகும் மேலாக நடந்த சந்திப்பு நிறைவடைந்தது.
லோக் பவன் விளக்கம்
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆளுநர் தரப்பில் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆளுநர் தரப்பில், தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் இல்லை. இதன் காரணமாகவே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications