என்னா மனுஷன்யா..ரியல் அமரன்களுடன் ’ஜெக்தீஷ்’.! இராணுவ வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ’தளபதி’ விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் உள்ள இந்திய இராணுவ Co 16 மெட்ராஸ் ரெஜிமென்டில் உள்ள இராணுவ வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைத்து அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கலக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் போதே திடீரென அரசியலில் குதிக்கப் போவதாக விஜய் அறிவித்ததோடு அதனை செயலிலும் செய்து காட்டி இருக்கிறார்.

கடந்த 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டின் மூலம் விஜய் தனது அரசியல் வருகையை மிகப்பெரிய அளவில் பதிய வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் குறித்து ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பேச வேண்டிய நிலைமை தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் கூட விஜயின் வருகை குறித்து மறைமுகமாக பேசி இருக்கிறார். இந்த நிலையில் பட விழாக்கள் தவிர வேறு எந்த பொது நிகழ்ச்சிகளிலும் விஜய் கலந்து கொள்வது கிடையாது. அப்படிப்பட்ட விஜய் தற்போது ராணுவ வீரர்களை சந்தித்து பேசி இருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இதற்கு முன்னர் விஜய் பட ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சிகளை தவிர வேறு எங்கும் பேசியதில்லை. ஆனால் தற்போது சென்னை பரங்கி மலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளிக்கு விஜய் சென்றிருக்கிறார். அங்கு நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் ராணுவ வீரர்களுடன் ஜாலியாக பேசியதோடு அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
பொதுவாக விஜய் குறித்து எந்தவித செய்திகளும் வெளியாவது இல்லை. மேலும் அவரது வருகை, பயணம் உள்ளிட்டவையும் யாருக்கு தெரிவிக்கப்படாது. மேலும் தற்போது தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வரும் அவர் கடைசி நேரத்தில் ஒப்புக்கொண்டு ராணுவ வீரர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக திட்டமிட்டிருந்தாலும், கடைசி நேரத்திலேயே விஜய் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார். இதனால் தான் இந்த செய்தி அதிகமாக தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியில் விஜயுடன் தளபதி 69 படத்தின் இயக்குனரான எச்.வினோத்தும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அமரன் படம் வெளியாகி இருக்கும் நிலையில் ராணுவ வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் ரியல் அமரன்களை சந்தித்து பேசிய விஜய்க்கு பாராட்டு குவிந்து வருகிறது.

-
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications