எது உண்மை.. ஆகஸ்ட் 3ல் கர்நாடகா செல்கிறாரா முதல்வர் விஜய்? குழப்பும் அமைச்சர்கள் ராஜ்மோகன், வினோத்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கர்நாடகா செல்ல உள்ளதாக வேளாண் அமைச்சர் வினோத் கூறி இருந்த நிலையில், அதனை அமைச்சர் ராஜ்மோகன் மறுத்துள்ளார். முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது உறுதியான தகவல் அல்ல என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ள நிலையில், முதல்வரின் பயணம் தொடர்பாக முதல்வர் தரப்பில் இருந்து மட்டுமே அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

Vijay

ஏற்கனவே இதுவரை மேட்டூ அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி பெங்களூரில் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா - தமிழ்நாடு முதல்வர்கள் சந்தித்து பேசலாம் என்று கர்நாடகா நீர்பாசனத்துறை அதிகாரிகள் மின்னஞ்சல் மூலமாக அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக முதல்வர் விஜய் பெங்களூர் செல்ல இருக்கிறார்.

இதனை வேளாண் துறை அமைச்சர் வினோத் நேற்று உறுதி செய்திருந்தார். இதற்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதேபோல் முன்னாள் முதல்வர்களான ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே, சட்டப் போராட்டம் மூலமாக பாதுகாக்கப்பட்ட உரிமையை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, கர்நாடகாவின் சூழ்ச்சி வலையில் விழுந்துவிடக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்று அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்வது குறித்து தெளிவுபடுத்தி விடுகிறேன். முதல்வர் விஜய் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதாக இருந்தாலும், நதிநீர் பிரச்சனை, தேசிய பிரச்சனை என்று எதுவாக இருந்தாலும் முதல்வர் விஜய்யே அறிவிப்பார்.

மற்ற யார் சொன்னாலும் அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடையாது. அது நன்கு பேசி ஆலோசனை செய்து முதல்வர் விஜய் அறிவிப்பார். மற்றப்படி அது உறுதியான தகவல் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆகஸ்ட் 3ல் விஜய் கர்நாடகா செல்கிறாரா என்பது குறித்த குழப்பம் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+