விஜய் பிரதமர் வேட்பாளரா? என்னை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்.. செங்கோட்டையன் சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன், என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள் என்று பதில் அளித்துள்ளார். முதல்வர் விஜய்யை நம்பியே இந்த தமிழ்நாடு வாக்களித்துள்ளதாக கூறிய செங்கோட்டையன், மக்கள் விரும்பும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வர முயற்சிகளை எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து விஜய்யை அக்கட்சியினர் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று புகழ்ந்து தள்ளினர். அதற்கேற்ப வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் விஜய் தொடர்பான ரீல்ஸ் வெளியிடப்பட்டு வந்தது. அதேபோல் இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 9.2% ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Vijay

இதனால் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்தனர். அமைச்சர் ராஜேஷ் குமார் நேரடியாகவே, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக சொல்லவில்லை என்றால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று அறிவித்தார். ஆனாலும் தவெக எம்எல்ஏ-க்கள் தொடர்ச்சியாக விஜய்யை அடுத்த பிரதமர் என்று பேசி வந்தனர்.

அதிலுக் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவதே ராகுல் காந்தி தான் என்று கூறி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் ராஜ்ய சபா எம்பி பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யை சந்தித்து கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு வர வேண்டாம்.. அதற்கேற்ப நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 110 விதிகளின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவதில் எந்த தவறும் கிடையாது. அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலினுக்கு பதிலாகவும் மற்ற அமைச்சர்கள் மானியக் கோரிக்கையில் பேசி இருக்கின்றனர் என்றார்.

தொடர்ந்து விஜய் அடுத்த பிரதமர் வேட்பாளரா? காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட தவெக எண்ணுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செங்கோட்டையன், முதல்வர் விஜய்யை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். இந்த தமிழ்நாடு அவரை நம்பி வாக்களித்துள்ளது. தமிழ்நாடு மக்களை காப்பதற்காக, அவர் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராக அமைச்சர்கள் மற்றும் தவெக எம்எல்ஏ-க்கள் பேசி வந்ததற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. செங்கோட்டையன் அமைதி காத்ததன் மூலமாக காங்கிரஸ் கட்சியுடன் சுமூக போக்கை கடைபிடிக்க தவெக எண்ணுவதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+