Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்டு மாதிரி கிடைச்ச சூப்பர் சான்ஸ்..விளையாட்டுத்தனமாய் மிஸ் செய்த விஜய்! இப்படியே போனா கஷ்டம் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம். அதே நேரத்தில் தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புகளை விஜய் விட்டுக் கொடுத்து விட்டார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வாய்ப்பு, ஜனநாயகன் படத்தின் மூலம் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்காதது என அரசியல் வாய்ப்புகள் மிஸ் ஆகிவிட்டதாகவும், விஜயின் பொறுமை தமிழக அரசியல் களத்துக்கு ஒத்து வராது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவராக நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கியபோது, தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றம் வரும் என்ற பெரிய எதிர்பார்ப்பு உருவானது. குறிப்பாக இளைஞர்கள், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், அரசியலால் ஏமாற்றம் அடைந்த நடுத்தர மக்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களில் நடந்த அரசியல் நகர்வுகளை பார்க்கும்போது, அந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தவெக தலைமையால் முடியவில்லை என்ற விமர்சனம் அரசியல் பார்வையாளர்களிடையே வலுத்து வருகிறது.

Tamil Nadu Assembly Election 2026 Vijay tvk

விஜய் அரசியல்

விஜய் அரசியலுக்கு வந்ததும், "பழைய அரசியலை மாற்றுவேன்", "நேர்மையான அரசியல்" போன்ற வார்த்தைகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தின. ஆனால் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக இன்னும் எந்த ஒரு வலுவான கூட்டணியையும் உறுதி செய்யவில்லை. தமிழக அரசியலில் தனித்து போட்டியிடுவது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால், ஆரம்பத்திலேயே ஒரு தெளிவான கூட்டணி பாதையை விஜய் தேர்வு செய்திருக்க வேண்டும் என்பதே பல அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

ஜனநாயகன்

திமுக, அதிமுக ஆகிய பெரிய கூட்டணிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியாக தவெக உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அதற்கு தேவையான கட்டமைப்பும், கூட்டணி பலமும் இன்னும் உருவாகவில்லை என்றே செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே, 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான விவகாரமும் விஜய்க்கு ஒரு அரசியல் வாய்ப்பாக அமைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த பட விவகாரத்தில் பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன.

தவெக திட்டம்

இப்படியான சூழலில், பாஜகவுக்கு எதிராக ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டை விஜய் எடுத்திருந்தால், அது அவரது அரசியல் அடையாளத்தை இன்னும் கூர்மையாக்கியிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் விஜய் அந்த விவகாரத்தில் நேரடியாக பாஜகவை விமர்சிக்காமல், அமைதியாகவே இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. "விஜய் தேவையற்ற அரசியல் எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்" என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

கூட்டணி வாய்ப்பு

யாரையும் கோபப்படுத்தக் கூடாது, எல்லா தரப்புக்கும் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற கணக்கில் விஜய் செயல்படுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் அரசியலில் தெளிவான நண்பனும், தெளிவான எதிரியும் இல்லாமல் முன்னேறுவது கடினம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், தவெக சார்பில் இதுவரை வெளிப்படையாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக எந்த உறுதியான தகவலும் இல்லை.

தமிழக அரசியல்

சில சிறிய கட்சிகள் விஜயை சந்தித்ததாக செய்திகள் வந்தாலும், அவை தேர்தல் கணக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை. இதனால் "விஜய் அரசியலில் மெதுவாக நகர்கிறாரா, அல்லது முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுகிறாரா?" என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. அதே நேரத்தில், விஜயின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் இன்னும் நம்பிக்கை முற்றிலும் குறைந்து விடவில்லை. "சரியான நேரத்தில் விஜய் தனது அரசியல் அசுரனை வெளிக்கொண்டு வருவார்" என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

விஜய் கூட்டணி வாய்ப்பு

ஆனால் அரசியல் களம் பொறுமைக்காக காத்திருக்காது என்பதுதான் யதார்த்தம். ஒவ்வொரு வாய்ப்பையும் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில், கூட்டணி விவகாரத்திலும், ஜனநாயகன் பட விவகாரத்தில் பாஜக எதிராக நிலைப்பாடு எடுப்பதிலும், விஜய் சில முக்கிய வாய்ப்புகளை தவற விட்டதாகவே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வரும் நாட்களில் விஜய் தனது அரசியல் பாதையை எந்த திசையில் கொண்டு செல்கிறார் என்பதே, தவெகவின் எதிர்காலத்தையும், தமிழக அரசியலில் அதன் இடத்தையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+