முருங்கைக்காய் பறிக்கிற முதல்வரை பார்த்ததில்லை! தேய்ந்த கிராமபோன்ல திமுக: விஜய்யை சாடிய கோடீஸ்வரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்த ஆட்சி உண்மையில் விஜய்யின் ஆட்சி போலத் தெரியவில்லை.. இது ஆதவ் அர்ஜுனாவின் ஆட்சி போலத்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் எதற்கு இவ்வளவு பயப்பட வேண்டும்? ராஜ்மோகன் வண்டிக்கு முன்னால் ஓடுவது அவர் விஜய் மீது வைத்துள்ள விசுவாசத்தினாலும், எளிய குணம் கொண்டவர் என்பதாலும் மட்டுமே. ஆனால் ஆதவ் அர்ஜுனா எப்போதாவது அப்படி வண்டிக்கு முன்னால் ஓடுவாரா?" என்று மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான கோடீஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அரசியல் களம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "நான் இதுவரை முருங்கைக்காய் பறிக்கும் முதலமைச்சரைப் பார்த்தது கிடையாது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கையில், திமுக அல்லது அதிமுகவை விமர்சிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லையா? தேய்ந்து போன கிராமபோன் ரெக்கார்டு போல எப்போது பார்த்தாலும் திமுகவையே தவெகவினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Vijay Murungakkai Row Kodeeswaran Criticism DMK

ஹெலிகாப்டரில் பயணம்

ஹெலிகாப்டரில் பயணம் செய்பவர்களுக்கும் மாட்டு வண்டிக்கும் என்ன சம்பந்தம்? முதலமைச்சர் ஹெலிகாப்டரில் செல்வது நேரத்தைக் குறைப்பதற்காகவே, ஆனால் மாட்டு வண்டியில் பயணம் செய்தால் நேரம் கூடுதல்தானே ஆகும்? இதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் சிந்திப்பார்களா? தாராபுரத்திற்கு சென்று முருங்கைக்காய் பறிப்பதற்கு பதிலாகப் பனையூரிலேயே பெரிய இடம் இருக்கிறது, அங்குள்ள மாட்டு வண்டியைப் பயன்படுத்தலாமே?

இந்த இடைத்தேர்தல் மட்டும் வரவில்லையென்றால், இந்தத் துரோகி பட்டமும், எம்.எல்.ஏ திருடன் என்ற பட்டமும் கிடைத்திருக்காது. தாராபுரத்திற்கு சென்றபோது மகளிர் அணியினர் எழுப்பிய கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இதுபோன்ற மலிவான அரசியலை செய்து பொதுமக்களிடம் விமர்சனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா?

முருங்கைக்காய் பறிப்பது

அரசியல் களத்தில் பல தலைவர்களுக்கு பன்முகத் தன்மை உண்டு. கலைஞர் வசனம் எழுதியவர், பத்திரிகையாளர். எடப்பாடி பழனிசாமி விவசாயி. சீமான் இயக்குநர் மற்றும் அரசியல்வாதி. ஆனால் நடிகர் விஜய்க்கு அப்படிப்பட்ட தனிப்பட்ட அரசியல் பின்புலம் இல்லை. அதனால்தான் முருங்கைக்காய் பறிப்பது, மாட்டு வண்டி ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். முகத்தைக் காட்டினாலே வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

இந்த ஆட்சி உண்மையில் விஜய் அவர்களுடைய ஆட்சி போலத் தெரியவில்லை.. இது ஆதவ் அர்ஜுனாவின் ஆட்சி போலத்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் எதற்கு இவ்வளவு பயப்பட வேண்டும்? ராஜமோகன் வண்டிக்கு முன்னால் ஓடுவது அவர் விஜய் மீது வைத்துள்ள விசுவாசத்தினாலும், எளிய குணம் கொண்டவர் என்பதாலும் மட்டுமே. ஆனால் ஆதவ் அர்ஜுனா எப்போதாவது அப்படி வண்டிக்கு முன்னால் ஓடுவாரா? ஒரு கூட்டத்தில் விஜய் இருக்க வேண்டிய இடத்தில் ஆதவ் அர்ஜுனா தலைமை ஏற்றுப் பேசுவதற்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் உள்ள வித்தியாசம் வெளிப்படையாகத் தெரிகிறது.

5 முனைப்போட்டி

தாராபுரம் தொகுதி நிலவரம் மற்றும் இடைத்தேர்தல் கள நிலவரம் குறித்துப் பார்க்கும்போது, அங்கு 5 முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தல்களில் 1, 2ம் இடங்களுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும். இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆதரவு, பலமான கூட்டணி பலம் மற்றும் 10 முதல் 15 அமைச்சர்கள் முகாமிட்டு வேலை பார்ப்பது போன்ற அட்வாண்டேஜ்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

ஆனாலும், இந்த இடைத்தேர்தல் களத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் கடும் விவாதத்திற்குள்ளாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தரப்பு போலீசாரின் ஒரு சில அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கடுமையாக எச்சரித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சியினர் மீது நடத்தப்படும் அடாவடிகளும், மாவட்ட செயலாளர்களைக் காவல் நிலையத்தில் நீண்ட நேரம் உட்கார வைப்பது போன்ற சம்பவங்களும் களத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சூழலில் களத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அடிப்படை புரிதல் இல்லை

ஆனால் மக்களின் நிலைமை வேறுவிதமாக உள்ளது. டீக்கடை வியாபாரிகளிடம் பேசினால் உண்மை புரியும். பால், சர்க்கரை மற்றும் கேஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் டீக்கடை நடத்துவதே கடினமாகியுள்ளது. விலைவாசி எங்கு செல்கிறது என்பது குறித்த அடிப்படைப் புரிதல் தலைவர்களுக்கு இருக்க வேண்டும். பெண்களுக்கெதிரான பிரச்சனைகள் குறித்துப் பேச தாராபுரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. தொடர்ச்சியாக ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டிருப்பதும், உரிய மாற்றுத் திட்டங்கள் இல்லாமல் இருப்பதும் அவர்களின் பதட்டத்தைக் காட்டுகிறது.

வேறு கட்சியை சொந்தம் கொண்டாடுவதா

ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்காக இவ்வளவு தூரம் பயந்து, ஊழல் குற்றச்சாட்டுகளையும் தாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்வது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் தைரியத்துடன் இவர்களை ஒப்பிட முடியாது.

அதிமுகவை சொந்தம் கொண்டாடுவதும், அந்த கட்சியின் அடையாளத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதும் அநாகரிகமான அரசியல் அணுகுமுறையாகும். ஒரு குழந்தையை நாம் கொஞ்சலாம்.. ஆனால், அந்த குழந்தைக்கு நாம் உரிமையாக முடியாது..

இவ்வளவு பணபலமும், அதிகார பலமும் இருந்தபோதிலும், இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது இயல்பான ஒரிஜினல் வெற்றி கிடையாது.. மாறாக அடுத்தவர்களின் தளத்தை எடுத்துப் பயன்படுத்தும் ஒரு தற்காலிக முயற்சியாகவே பார்க்கப்படுகிறது... தூய்மையான அரசியல் இல்லாமல், பணத்தை மட்டுமே முன்வைத்து நடத்தப்படும் இந்தத் தேர்தல் களத்தின் உண்மையான நிலவரத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+