தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்! திமுக, அதிமுக கூட்டணிகளை உடைத்து ஆட்சி அமைக்கும் விஜய்? யாருக்கு லக்?
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஒரு 'தொங்கு சட்டசபை' சூழலை உருவாக்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரும்பான்மையை நிரூபிக்க அதிரடித் திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வென்றுள்ளது. திமுகவை சேர்ந்த 15 அமைச்சர்களும் ஒரு சபாநாயகரும் தோல்வி அடைந்துள்ளனர்.

தவெக 108 இடங்களில் வென்றிருந்தாலும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் தவெக மற்ற கட்சிகளின் ஆதரவை பெற முனைப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.
திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு குறி?
சட்டசபையில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அடைய இன்னும் (திருச்சி கிழக்கை ஒதுக்கிவிட்டு பார்த்தால் தவெகவின் பலம் 107தான்) 11 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் கூட்டணிகளை உடைப்பதன் மூலமே நிலைத்த ஆட்சியை வழங்க முடியும் எனத் தவெக கருதுகிறது.
காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை: திமுக கூட்டணியில் நீண்டகாலமாக நீடிக்கும் காங்கிரஸை தனது பக்கம் இழுக்க விஜய் தரப்பு தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிகிறது.
பாமக-வுக்கு அழைப்பு: அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியை (பாமக) தங்கள் பக்கம் கொண்டு வருவதன் மூலம் வட மாவட்டங்களில் தங்களது பிடியை வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆதரவு?
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய தலைமை உருவாக வேண்டும் என்ற நோக்கில், இடதுசாரி கட்சிகள் (சிபிஐ, சிபிஎம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகள் தவெக-விற்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மதச்சார்பற்ற பிம்பத்தைத் தக்கவைக்கவும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.
எத்தனை தேற்றலாம்
தவெக- 107
காங்கிரஸ் - 5
பாமக- 4
ஐயூஎம்எல் - 2
சிபிஐ- 2
சிபிஎம்- 2
ஆக 107+ 13= 122 இடங்கள் என பெரும்பான்மையை தாண்டி கிடைக்கிறது. கூடுதலாக விசிக 2 இடங்கள், தேமுதிக ஒரு இடத்தை சேர்த்தால் மொத்தம் 125 சீட்கள் கிடைக்கும் நிலை உள்ளது. ஆனால் இந்த 16 சீட்களை கொடுக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டிய சூழல் தவெகவுக்கு உள்ளது.
ஆளுநருக்கு விடுத்த கோரிக்கை
மின்னஞ்சல் வாயிலாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில்: தமிழகத்தில் 108 இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கத் தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று சாதனை
1977-ல் எம்.ஜி.ஆர் 30.40% வாக்குகள் பெற்று நிகழ்த்திய சாதனையை முறியடித்து, தவெக தற்போது 34.92% வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த இமாலய வெற்றியின் மூலம் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தேவையான ஆதரவைத் திரட்டுவதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.
பழைய கூட்டணிகள் உடைந்து புதிய கூட்டணி ஆட்சி மலருமா என்பதை அடுத்த சில நாட்களில் ஆளுநர் எடுக்கும் முடிவு தீர்மானிக்கும். அவ்வாறு கூட்டணியை உடைக்கும் பட்சத்தில் அதற்கான பதவியை விஜய் தருவார் என கருதப்படுகிறது.
-
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி? தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
“இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே”! விஜய்யின் பயிர்க்கடன் ரத்து.. விவசாயிகள் அப்செட் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண்












Click it and Unblock the Notifications