சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
May 10, 2026, 4:41 pm IST
சட்டசபையில் வானளாவிய அதிகாரம் கொண்ட பதவி சபாநாயகர் பதவி! இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதியின் தவெக எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைத்தார்
May 10, 2026, 4:33 pm IST
பெரியார் திடலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மரியாதை.. பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை முதல்வர் விஜய் சந்தித்தார். அதைத் தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
May 10, 2026, 3:35 pm IST
திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். பெரம்பூர் எம்எல்ஏ பதவியை தக்க வைத்து கொண்ட விஜய், திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எலஏ பதவியை ராஜினாமா செய்தார்.
May 10, 2026, 1:40 pm IST
தமிழ்நாடு சட்டசபை நாளை காலை 9:30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக சபாநாயகரின் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கிறார்கள்.
May 10, 2026, 1:30 pm IST
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள்.. எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க.. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.. பட்ஜெட்டைப் படிக்காமலா வாக்குறுதி கொடுத்தீர்கள்? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க: ஸ்டாலின்
May 10, 2026, 1:03 pm IST
அலுவல் பணிகளை தொடங்கிய முதல்வர் விஜய்!
May 10, 2026, 12:21 pm IST
சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2011-16 காலகட்டத்தில் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் முதல்வராக பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்ட முக்கிய அறிவிப்புகள்:
200 யூனிட் இலவச மின்சாரம்
பெண்கள் பாதுகாப்பிற்கான சிங்கப்பெண் ரோந்துப் படை
போதைப்பொருள் இல்லாத சமூகத்திற்கான புதிய ரோந்துப் படை
May 10, 2026, 11:16 am IST
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு, பிரதமர் மோடி வாழ்த்து!
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.@TVKVijayHQ
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு முதல்வர் விஜய்!
May 10, 2026, 11:09 am IST
"மீண்டும் சந்திக்கும் வரை.. இல்லை இல்லை.. மீண்டும் மீண்டும் சந்திப்போம்.. அதுவரை நன்றி வணக்கம்"- என சொல்லி உரையை நிறைவு செய்த விஜய்
May 10, 2026, 11:07 am IST
தவெக அரசுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்!
May 10, 2026, 11:04 am IST
இங்கு விஜய் தலைமையிலான ஒரு சென்டர் தான்.. வேறு எந்தவொரு பவர் சென்டரும் இல்லை- விஜய்
May 10, 2026, 11:03 am IST
முகத்தை மூடி கொண்டு யாரையும் சென்று சந்திக்க மாட்டேன். மக்களாகிய உங்களுக்கு தெரியாமல் யாரையும் போய் சந்திக்க மாட்டேன்- விஜய்
May 10, 2026, 11:03 am IST
முதல்வராக விஜய்யின் முதல் உரை!
May 10, 2026, 11:01 am IST
எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளீர்கள்.. அதேநேரம் எனக்கு கொஞ்சம் அவகாசத்தையும் கொடுக்க வேண்டும்- விஜய்
May 10, 2026, 11:01 am IST
தமிழ்நாட்டின் நிலை கஜானா காலி. 10 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளனர். தமிழ்நாடு நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- விஜய்
May 10, 2026, 11:00 am IST
நான் ஒன்றும் தேவத்தூவன் இல்லை.. சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன். நான் அதை செய்வேன், இதை செய்வேன் என பொய்ய சொல்ல மாட்டேன். மக்களுக்காக நல்லதை செய்வேன்- விஜய்
May 10, 2026, 10:57 am IST
நான் ஒன்னும் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் இல்லை. ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகனாக வாழ்க்கையை தொடங்கிய நான், இப்போது இங்கு இருக்கிறேன்- விஜய்
May 10, 2026, 10:56 am IST
"நெஞ்சில் குடியிருக்கும்.." என சொல்லி தனது உரையை தொடங்கினார் விஜய்
May 10, 2026, 10:55 am IST
தமிழ்நாடு முதல்வராக முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய்!
May 10, 2026, 10:54 am IST
200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை, போதைப் பொருள் தடுப்புப்படை கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்!
May 10, 2026, 10:53 am IST
தமிழ்நாடு முதல்வராக முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய்!
May 10, 2026, 10:49 am IST
தமிழ்நாடு முதல்வர் விஜய், சற்று நேரத்தில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு, மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
May 10, 2026, 10:49 am IST
வழக்கமாக தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். ஆனால், விஜய் பதவியேற்பு விழாவில் நிகழ்ச்சியின் தொடக்கம், இறுதி என இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டது.
May 10, 2026, 10:47 am IST
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற விஜய், முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
May 10, 2026, 10:46 am IST
இன்று தமிழ்நாடு அமைச்சர்களாக பதவியேற்றவர்கள்:
புஸ்ஸி என்.ஆனந்த்
ஆதவ் அர்ஜுனா
கே.ஜி.அருண்ராஜ்
கே.ஏ.செங்கோட்டையன்
வெங்கடரமணன்
நிர்மல்குமார்
ராஜ்மோகன்
டி.கே.பிரபு
கீர்த்தனா
READ MORE
6:42 AM, 10 May
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் இன்று முதல்வராக தமிழகத்தில் பதவியேற்கிறார்.
6:47 AM, 10 May
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.
6:47 AM, 10 May
தமிழகத்தில் மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். விஜய் நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து மெஜாரிட்டியை நிரூபித்ததால் இன்று பதவியேற்பு
6:49 AM, 10 May
சட்டசபையில் தவெகவிற்கு 107 எம்எல்ஏக்கள் (விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார்) உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது. ஆனால் விஜய்க்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.
6:51 AM, 10 May
விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
#WATCH | Delhi | Leader of Opposition (LoP) Rahul Gandhi arrives at IGI Airport as he heads to Tamil Nadu
He will be attending the swearing-in ceremony of Tamil Nadu CM-designate Vijay in Chennai, today. pic.twitter.com/Z5yNaTr0vw
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் விஜய்யின்உருவத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
#WATCH | Puri, Odisha: Sand artist Sudarshan Patnaik congratulates TVK chief and Tamil Nadu CM-designate Vijay through a sand sculpture, ahead of his swearing-in ceremony. (09.05) pic.twitter.com/2biVvzDa1B
தமிழக முதலமைச்சராக பதவியேற்பு விழாவிற்காக விஜய் இன்னும் சற்று நேரத்தில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்படுகிறார். விஜய்யை அழைத்து செல்ல தயார் நிலையில் கான்வாய் வாகனங்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.
8:02 AM, 10 May
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து சென்னை வந்திறங்கினார் லோக்சபா சபாநாயகர் ராகுல் காந்தி.
8:19 AM, 10 May
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து பதவியேற்பு விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு தவெக தலைவர் விஜய் காரில் புறப்பட்டார்.
8:35 AM, 10 May
கான்வாய் வாகனங்கள் சூழ நேரு உள்விளையாட்டு அரங்கம் நோக்கி விஜய் பயணித்து வருகிறார்
8:37 AM, 10 May
விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகை திரிஷா தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.
8:44 AM, 10 May
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காரில் புறப்பட்டார் ராகுல் காந்தி.
8:58 AM, 10 May
நேரு அரங்கத்துக்கு வந்தார் விஜய்
முதல்வராக பதவியேற்க நேரு உள்விளையாட்டு அரங்கை வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்
9:06 AM, 10 May
விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா மற்றும் அவரது தாய்க்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கீடு.
9:14 AM, 10 May
சீமானை வீழ்த்திய பிரபுவிற்கு அமைச்சர் பதவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வீழ்த்திய பிரபு இன்று அமைச்சராக பதவியேற்கிறார்.
9:15 AM, 10 May
பதவியேற்பு விழாவிற்கு வந்த நடிகை திரிஷா, நடிகர் விஜய்யின் தாயார் ஷோபாவை ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
9:24 AM, 10 May
பதவியேற்பு விழாவில் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜூனா.
#WATCH | Tamil Nadu: TVK leaders Aadhav Arjuna, Sengottiyan at the Jawaharlal Nehru Stadium in Chennai, where TVK Chief C Joseph Vijay will take oath as the Chief Minister of Tamil Nadu, shortly.
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்று உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை திரிஷா.
Tamil Nadu: Actor Trisha Krishnan at the Jawaharlal Nehru Stadium in Chennai, where TVK Chief C Joseph Vijay will take oath as the Chief Minister of Tamil Nadu, shortly. pic.twitter.com/VmvDUqIjIq
விஜய் பதவியேற்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ சண்முகம் பங்கேற்பு
9:43 AM, 10 May
விஜய் பதவியேற்பு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பங்கேற்பு. காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் எம்பி பங்கேற்பு
9:43 AM, 10 May
விஜய் பதவியேற்பு விழா அரங்கத்திற்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகை
9:43 AM, 10 May
பதவியேற்பு விழாவிற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
9:47 AM, 10 May
பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் லோக்பவனில் இருந்து புறப்பட்டார்.
9:47 AM, 10 May
கோட் சூட் அணிந்து விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு
9:53 AM, 10 May
பதவியேற்பு விழாவில் லாட்டரி அதிபர் சாண்டியகோ மார்ட்டின் குடும்பத்துடன் பங்கேற்பு
9:54 AM, 10 May
லாட்டரி அதிபர் மார்ட்டின் உடன் அவரது மனைவியும், அதிமுக எம்எல்ஏவுமான லீமா ரோஸ் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு. மார்ட்டின் – லீமா ரோஸின் மருமகன் ஆதவ் அர்ஜூனா இன்று அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
TVK C Joseph Vijay Swearing-in-Ceremony (விஜய் பதவியேற்பு விழா) LIVE News Updates in Tamil: Follow LIVE updates of TVK leader C Joseph Vijay’s swearing-in ceremony as Tamil Nadu Chief Minister. Get oath-taking highlights, cabinet list, guest arrivals, speeches, and latest updates in Tamil at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.