அதிமுக கூட்டத்திற்கு தவெக கொடி ஏந்தி செல்ல கூடாது? கடுப்பான விஜய்.. பறந்த வாய்மொழி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை எடுத்து செல்ல கூடாது, அங்கே தவெக கொடியை காட்ட கூடாது என்று விஜய் கட்சி தொண்டர்களுக்கு நிர்வாகிகள் வழியாக வாய் மொழி உத்தரவிட்டு உள்ளாராம்.

அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

TVK Vijay

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் பரபரக்கும் சூழலில் கூட்டணி தொடர்பாக இன்று மக்கள் மத்தியில் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக - தவெக கூட்டணி

கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாநாட்டிலும், அதன்பின் நடந்த சுற்றுப்பயணங்களிலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். ஜெயலலிதாவின் கட்சி பாஜகவிதான் அடகு வைக்கப்பட்டுவிட்டதாக விமர்சனம் செய்து இருந்தார்.

இப்போது அதே விஜய் அதிமுகவின் உதவியை நாடி இருக்கிறார். அதோடு இல்லாமல்.. ஆந்திர பிரதேசத்தில் எப்படி சந்திராபாபு நாயுடுவுக்கு பவன் கல்யாண் வலது கை போல இருக்கிறாரோ அதே போல்தான் தமிழ்நாட்டில் விஜய் எடப்பாடிக்கு வலது கை போல உருவெடுப்பார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகிகள் வாய் மொழி உத்தரவு

அதிமுக கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை எடுத்து செல்ல கூடாது , அங்கே தவெக கொடியை காட்ட கூடாது என்று விஜய் கட்சி தொண்டர்களுக்கு நிர்வாகிகள் வழியாக வாய் மொழி உத்தரவிட்டு உள்ளாராம்.

நமது கட்சி சார்பாக யாரும் கொடியை எடுத்து செல்ல கூடாது. அதிகார்பூர்வமாக கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. கூட்டணி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதனால் இப்போது மற்ற கட்சிகளின் கூட்டத்திற்கு நமது கொடியை எடுத்து செல்ல வேண்டாம். நாம் இப்போது தனியாகவே இப்போது அரசியல் செய்கிறோம். அதனால் மற்ற கட்சிகளின் கூட்டத்திற்கு கொடியை எடுத்து செல்ல வேண்டாம், என்று விஜய் கட்சி தொண்டர்களுக்கு நிர்வாகிகள் வழியாக வாய் மொழி உத்தரவிட்டு உள்ளாராம்.

போன் கால் பேச்சு

ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.

மேலும், பிரச்சாரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திப்பதாகவும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார் என்று அதிமுக வட்டாரம் தெரிவித்து . இந்த அழைப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக அதிமுக வட்டாரம் தெரிவித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+