Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மா.செக்கள் எல்லாம் உடனே வாங்க.. அழைத்த விஜய்.. நாளையே கூடுது மீட்டிங்.. பின்னாடி பெரிய பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Vijay orders on Tamizhaga Vetri Kazhagam District secreatary to attend tomorrow meeting

இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் திட்டம் என்ன என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சியின் கட்டமைப்பை வலிமைப் படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விவகாரங்களை பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இதற்காக கட்சியின் நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

விஜய் கட்சி: நடிகர் விஜய் தான் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சி விரைவில் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளதாம். இந்த நிலையில்தான் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை விஜய் பிறப்பித்துள்ளாராம்.

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். நடிகர் விஜய் சார்பாக முதலில் விஜய் மக்கள் இயக்கம்.. விஜய் மக்கள் கட்சி என்று மாற்றப்படும் திட்டத்தில் இருந்தது. ஆனால் அது சரியாக இல்லை என்பதால்.. தமிழக மக்கள் கட்சி என்று உருவாக்கும் திட்டம் இருந்தது.

தமிழக மக்கள் கட்சிதான் கடந்த வாரம் வரை இருந்தது. இந்த பெயர் கூட இணையத்தில் கசிந்தது. பெயர் கசிந்த காரணத்தால்.. விஜய் அப்போதே அப்செட் ஆனதாக கூட கூறப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் இந்த பெயரை கடைசியில் வேண்டாம் என்று நீக்கி உள்ளனர். அதற்கு காரணம் அதன் ஆங்கில சுருக்கம். தமிழக மக்கள் கட்சி என்பதை சுருக்கினால் TMK என்று வரும்.

அப்படி வந்தால் அது DMK என்பதை போலவே சத்தம் வரும். கிராமங்களில் வேறுபடுத்தி காட்டுவது கடினம். இதன் காரணமாகவே தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் வெற்றிபெறும்.. தமிழ்நாட்டை வெற்றிபெற வைக்கும் கட்சி என்பதை உணர்த்தும் விதமாக.. தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது

முக்கியமான உத்தரவு: நடிகர் விஜய் தான் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சி விரைவில் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளதாம். இந்த நிலையில்தான் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை விஜய் பிறப்பித்துள்ளாராம்.

அதன்படி விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்கள், தமிழக வெற்றி கழகத்தின் செயலாளர்களாக இருப்பர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இனி வரும் நாடகளில் அவர்கள் நடிகர் சங்க மாவட்ட தலைவர்கள் கிடையாது. மாறாக.. அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் என்ற பொறுப்பில் இருப்பார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இரவோடு இரவாக சென்ற இந்த செய்தி காரணமாக விஜய் ரசிகர்கள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் நாட்களில் மேலும் சில பதவியில் இதேபோல் நிரப்பப்படும் என்பதால் விஜய் ரசிகர்கள் தங்களுக்கு முக்கிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கட்சி தொடங்கிய சில நாட்களில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டதால் விஜய் ரசிகர்களும் ஏக மகிழ்ச்சியில் உள்ளனராம்.

முக்கிய உத்தரவு: கட்சி பணிகளை நிர்வாகிகள் தொடங்கிய நிலையில். இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள் என்று உத்தரவிட்டுள்ளாராம். இணையத்தில் கட்சியை சிலர் கிண்டல் செய்யும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறாராம்.

அதேபோல் குக்கிராமங்களிலும் கட்சியைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும். 2024 தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும் என்று விஜய் தனது கட்சி "தோழர்களுக்கு" உத்தரவிட்டுள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+