முதல்வர் ரேஸில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடம் பிடித்த விஜய்! லயோலா கணிப்பில் தகவல்
சென்னை: முதலமைச்சர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில் 2 ஆம் இடத்தில் விஜய் இருப்பதாக சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பின்னுக்குத் தள்ளி விஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு சார்பில், 2026 சட்டசபை தேர்தலில் யார் முதலமைச்சர் ஆவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கேட்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ள தலைவர்கள் என்ற கேள்விக்கு பெற்றப்பட்ட கருத்துகள் அடிப்படையில், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்து இரண்டாம் இடத்தை தவெக தலைவர் விஜய் பிடித்துள்ளார். 3ஆம் இடத்தில் எடப்பாடி பழனிசாமி பிடித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கணிப்புக்காக நகரங்களில் 54.8% பேரிடமும், கிராமங்களில் 41.3 சதவீதம் பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கருத்துக் கணிப்பு 234 தொகுதிகளிலும் 81,375 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் 21 முதல் 30 வயதினர் 25.6 சதவிகிதம் பேரிடமும், 46 முதல் 60 வயதினர் 23.5 சதவிகிதம் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 41.3 சதவிகிதம் பேர் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த கருத்துக் கணிப்பில் 81.71 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்றும், 10.55 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும், 7.75 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தலைமையிலான தவெகவால் யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துக் கணிப்பின் முடிவில், திமுகவுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக விசிக, அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், தவெகவால் நாம் தமிழர் கட்சிக்கு சொற்ப அளவே பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது.
மேலும், புதிய வாக்காளர்களை கவரும் இளம் தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் தவெக தலைவர் விஜய்க்கு முதல் இடமும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 2-ஆம் இடமும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-ஆம் இடமும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4-ஆம் இடமும் கிடைத்துள்ளது.
-
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications