விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் 86.72% வாக்குகள் பதிவு.. கடந்த 3 தேர்தலில் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 6 மணி நிலவரப்படி 86.72 வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் எவ்வளவு வாக்குகள் பதிவாகின. அதில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்ற விவரங்களை பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் முதல் முறையாக அரசியல் களம் கண்டுள்ளார். 233 தொகுதிகளிலும் வேட்பாளர்களை விஜய் நிறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு டிவி சின்னத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் களமிறங்கியுள்ளார்.

Vijay Perambur Constituency

சென்னையில் வாக்கு சதவீதம் உயர்வு

சென்னையை பொறுத்தவரை திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. சென்னையில் திமுக வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கியுள்ளார். இதனால், இந்த தொகுதியில் எவ்வளவு வாக்குகள் அவருக்கு கிடைக்கும்.. வெற்றி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சென்னையிலும் கடந்த 2021-ல் வாக்கு சதவீதம் 63.06 இருந்த நிலையில், இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் 81.34 (6 மணி நிலவரப்படி) ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பூர் - 2011 சட்டசபை தேர்தல்

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 6 மணி நிலவரப்படி 86.72 வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் எவ்வளவு வாக்குகள் பதிவாகின. அதில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்ற விவரங்களை பார்க்கலாம்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலி பெரம்பூர் தொகுதியில் 69.7 சதவீத வாக்குகள் விழுந்தது. இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

பெரம்பூர் - 2016 சட்டசபை தேர்தல்

2016 சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 64.95 சதவீத வாக்குகள் பதிவானது. அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடம் பெற்ற திமுக வேட்பாளர் என். ஆர். தனபாலன் 79,455 வாக்குகள் பெற்றார்.

பெரம்பூர் - 2019 இடைத்தேர்தல்

2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. வெற்றி வேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக சார்பாக போட்டியிட்ட ஆர்டி சேகர் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் மொத்தம் 64.39 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிமுக ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வென்றது.

பெரம்பூர் - 2021 சட்டசபை தேர்தல்

2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 62.96 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், திமுக சார்பாக போட்டியிட்ட ஆர்.டி. சேகரே மீண்டும் வெற்றி பெற்றார். ஆர்.டி சேகர் சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+