விஜய் தேர்தல் வழக்கு.. ஐகோர்ட்டில் நடந்த காரசார வாதம்.. வரும் 14 ஆம் தேதி தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீது வரும் அக்டோபர் 14 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்.

சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜோசப் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், முதல்வர் விஜய் தனது வேட்பு மனுவில் சொத்துகளை மறைத்துள்ளதாகவும், தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டி அத்தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளரான ஆர்.டி.சேகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

Vijay Perambur Election Case High Court to Deliver Verdict on October 14

பெரம்பூர் தொகுதி வாக்காளரான தினேஷ் சார்பில் வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், கொடைக்கானல் வில்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்துக்கு உரிமையாளர் என சொந்தம் கொண்டாடுகிறார்.

திட்டமிட்டு வேண்டுமென்றே சொத்துகளை மறைத்தும், மதிப்பை குறைத்தும் வேட்புமனுவில் தவறான தகவல்களை விஜய் தெரிவித்துள்ளதால் அவர் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும், முதல்வர் விஜய்க்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில், முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும், தகவல்களை மறைத்தது, வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனில் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் வாங்கியுள்ளதாகக் கூறியுள்ள 50 செண்ட் நிலம், வருவாய் துறை ஆவணங்களின்படி, அரசு புறம்போக்கு நிலம் என, தினேஷ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

வேட்பு மனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது எப்படி விதிமீறலோ, அதேபோல சொத்து விவரங்களை மறைப்பதும் விதிமீறல் மட்டுமல்ல ஊழல் நடவடிக்கை. விவரங்கள் மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரி முழுமையான விசாரணை நடத்தமுடியாது. தேர்தல் வழக்கில் தான் இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும் என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி லட்சுமிநாராயணன், ஆக்கிரமிப்பாளர் தேர்தலில் போட்டியிட முடியாதா, தகுதி இழப்பு ஏற்படுகிறதா? வில்பட்டி நிலம் தொடர்பாக விஜய், விற்பனை பத்திரத்தை வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளாரே எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தினேஷ் தரப்பில், அரசு புறம்போக்கு நிலம் என வருவாய்த்துறை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என விளக்கமளித்தார்.

முதல்வர் விஜய் தரப்பில், வேட்பு மனுவில் தகவல்களை மறைத்தது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, குற்ற வழக்கு சம்பந்தப்பட்டது. விஜய் வசதி படைத்தவர் என எல்லா வாக்காளருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, சொத்தை மறைத்ததாகக் கூறி, அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும் என வாதிடப்பட்டது.

முதல்வர் விஜய் மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த மனு மீதான தீர்ப்பை, நீதிபதி, வரும் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+