யாரை நம்புவது? அதிமுக உடன் கூட்டணி வைத்தால் தோல்வி? விஜய் எடுக்கும் அவசர சர்வே.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (TVK), அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டணிக்கு தமிழ்நாட்டில் பொதுமக்கள் ஆதரவு உள்ளதா என்பதை அறிய விஜய் ஒரு தனிப்பட்ட ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சர்வே நடத்தும் தனியார் அமைப்பு ஒன்றை அவர் அணுக உள்ளாராம்.

அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு முன், துல்லியமான தரவு அடிப்படையிலான புரிதலை விஜய் விரும்புவதாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக - பாஜக - தவெக இடையே கூட்டணி வந்தாலும் அது விஜய்க்கு சாதகமாக இருக்காது.. ஆளும் திமுகவிற்கே சாதகமாக இருக்கும் என்று வெளியான சர்வே ஒன்று தமிழக வெற்றிக் கழகம் தரப்பை யோசிக்க வைத்துள்ளதாம். என்டிஏ கூட்டணியில் இணையலாமா? அல்லது அதிமுகவுடன் மட்டும் தனியாக கூட்டணி வைக்கலாமா? என்று விஜய் தீவிர ஆலோசனை செய்து வருகிறாராம்.

TVK Vijay

திமுக எடுத்த சர்வே பின்னணி

ஆளும் திமுக ரகசியமாக நடத்திய கருத்துக் கணிப்பின்படி, நடிகர் விஜய் அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

தி பிரிண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள இந்த செய்தியில், ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால் 23 சதவீத வாக்குகளைப் பெறும் என திமுக தரப்பு நடத்திய உட்கட்சி சர்வே கணித்துள்ளது. இந்த ஆய்வின்படி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வலுவான ஆதரவு இருப்பதும், திமுக-வுக்கு ஒரு முக்கிய போட்டியாளராக அந்த கட்சி மாறக்கூடும் என்பதும் தெரிய வந்துள்ளது. 2.91 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 1,245 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் தவெக ஆகிய கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால், திமுக 50 சதவீத வாக்குகளையும், என்.டி.ஏ 35 சதவீத வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி (என்.டி.கே) 12 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 3 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என இந்த ரகசிய ஆய்வு குறிப்பிடுகிறது.

விஜய் தனிப்பட்ட சர்வே

இந்த நிலையில்தான் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா என்று விஜய் தனிப்பட்ட ஆய்வை நடத்த உள்ளாராம். இந்த ஆய்வானது, தமிழகத்தின் அனைத்து முக்கிய மாவட்டங்களையும் உள்ளடக்கியது என்று உள்விவர வட்டாரங்கள் கூறுகின்றன. வாக்காளர்களின் மனநிலை, சாதி செல்வாக்கு, இளைஞர்களின் ஆதரவு மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தற்போதைய பிம்பம் ஆகியவை இதில் முக்கியமாக கவனிக்கப்படும்.

உள் கட்சி குழுக்களை நம்பாமல், தொழில்முறை அரசியல் ஆலோசகர்களையும், தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களையும் விஜய் இந்த ஆய்வுக்காக பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஆய்வு முடிவுகள் பாரபட்சமின்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்து வருவதாக வந்த செய்திகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+