தாய் சென்டிமெண்ட்டை கையிலெடுத்த விஜய்.. இனி பொறுத்து கொள்ள மாட்டோம்.. திமுகவிற்கு வார்னிங்
சென்னை: ''திமுக ஒரு டேன்சரான வெப்பனை கையில் எடுத்து இருக்கிறார்கள். என் சொந்த தாயைதப்பாக பேசும்போது கூட நான் பொறுத்துகிட்டேன். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிற என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகளை அசிங்கமாக பேசினால் பொறுத்து கொள்ள முடியாது'' என்று தாய் சென்டிமெண்ட்டை கையில் எடுத்து முதல்வர் விஜய் பேசினார்.

மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் தாய் சென்டிமெண்ட்டை கையில் எடுத்து பேசினார். இதுதொடர்பாக முதல்வர் விஜய் பேசியதாவது:
''Before Concluding My speech.. என் மனதில் இருக்கிற சின்ன வேதனையான.. சின்ன வேதனை இல்லை.. பெரிய வேதனையான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த திமுகவிற்கு நம் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியவில்லையே என்ற விரக்தியில், அந்த கடுப்பில் ஒரு டேன்சரான வெப்பனை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
என் சொந்த தாயை.. என்னை பெற்ற அம்மாவை தப்பாக பேசும்போது கூட நான் பொறுத்துகிட்டேன். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிற என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், என் கூட துணையாக இருக்கிற தாய் அன்பு காட்டுகிற தமிழ்நாட்டு பெண்களை அசிங்கமாக பேசும்போது தான்.. திமுக தலைமையும் இந்த மாதிரி தான் பேசுகிறார்கள். திமுக தலைமையும் இந்த மாதிரி தான் பேசுகிறது. இந்த பழக்க தோஷத்தில் ஸ்டாலின் சாரும், அவரது குடும்பத்தினரும் உட்கார்ந்து ரசிக்கிறார்கள். இதை இனி யாரும் பொறுத்து கொள்ள முடியாது'' என்று சாடினார்.
முதல்வர் விஜய்யின் இந்த பேச்சின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது சமூக வலைதளங்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை போல் தற்போது தவெகவிற்கு ஆதரவாக இளம்பெண்கள், பெண்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் அல்லது வேறு சில நெட்டிசன்களால் அவ்வப்போது காட்டமாகவும், ஆபாசமாகவும் விமர்சிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சில சமயங்களில் தவெக - திமுகவினர் இடையே வலைதளங்களில் மோதலே நடந்து வருகிறது. இந்நிலையில் தான் முதல்வர் விஜய் அதனை குறிப்பிட்டு திமுகவிற்கு வார்னிங் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications
