இப்படி இருந்தா எப்படி? ஆமையை விட மெதுவாக போகும் தவெக! வேலையையே ஆரம்பிக்காத விஜய்! என்னாகும் 2026?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மிக வேகமாக பணியாற்றி வருகின்றன. ஆனால் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே என சொல்லும் விஜய் இதுவரை ஆமை வேகத்தில் அரசியல் களத்தில் நகர்ந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. விருப்பமனு பட்டியல் குறித்த விரிவான தகவல்கள் இல்லை, வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தவில்லை, ஆனால் பட்டியல் மட்டும் தயாராகி இருக்கிறதாம். அது மட்டும் அல்லாமல் கடந்த டிசம்பர் மாதமே முடிப்பதற்கு திட்டமிட்ட விஜய் மக்கள் சந்திப்பு இன்னும் தமிழகத்தின் பாதி மாவட்டங்களை கூட கடக்கவில்லை எனவும், சூழல் இப்படி இருக்கையில் விஜய் எப்படி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சபட்ச வெப்ப நிலையில் இருக்கிறது. திமுக அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளை துவக்கி விட்டன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தனது தலைமையில் மிகப்பெரிய கூட்டணியை கட்டி எழுப்பி வெற்றிகரமாக தேர்தலை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.
அதே நேரத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார். மறுபுறம் நாம் தமிழர் கட்சியும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவக்கி விட்டது.

தமிழக வெற்றிக் கழகம்
தமிழகத்தின் மாற்று சக்தி.. திமுகவுக்கு நாங்கள்தான் எதிரி என சொன்ன தமிழக வெற்றி கழகத்தின் விஜயின் செயல்பாடுகள் தான் தேர்தல் களத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னும் முழு அரசியலுக்கு அவர் வரவில்லி எனவும், ஆமை வேகத்தில் தான் அவரது செயல்பாடுகள் இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
விஜய் அரசியல் கட்சி
ஏற்கனவே சொன்னது போல கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கட்சியின் முழு கட்டமைப்பும் இன்னும் வடிவமைக்கப்படவில்லை. மாவட்டச் செயலாளர் நியமனம், ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றிருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வமாக கிளைக் கழகங்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் அது நடந்து விட்டது என சொல்லி வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். மாநில தலைமை ஏமாற்றப்படுவது இதிலிருந்தே தெரிகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
விஜய்
இது ஒருபுறம் இருக்க கட்சி ஆரம்பித்த விஜய் இன்னும் தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு கூட முழுமையாக செல்லவில்லை. அப்படி சென்றாலும் அது சில நிமிட பேச்சோடு முடிந்து வருகிறது. மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் தமிழக அரசியல் களத்துக்கு வந்த போது எம்ஜிஆர் கால்படாத இடமே இல்லை என்பார்கள். ஆனால் தன்னை எம்ஜிஆர் போல் நினைத்துக் கொள்ளும் விஜய் மாவட்டத்துக்கு சென்றால் போதும் அப்பகுதி மக்கள் முழுவதும் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என நினைப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
தவெக தேர்தல் திட்டம்
இது ஒருபுறம் இருக்க 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் டெபாசிட் கட்டி அதில் 10% கூட பணையூருக்கு திரும்பவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. ஒரே நாளில் பத்தாயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக சொன்ன தமிழக வெற்றிக்கழகம் அதில் எத்தனை திரும்ப வந்தது என இன்னும் அதிகாரப்பூர்வ கணக்கில் சொல்லவில்லை. மேலும் கட்சியில் எத்தனை பேர் தொண்டர்களாக சேர்ந்தார்கள் என்ற எண்ணிக்கையும் இதுவரை வரவில்லை.
2026 சட்டசபை தேர்தல்
இதற்கிடையே என்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாக தமிழக வெற்றிக்கழக தரப்பு சொல்கிறது. ஆனால் விருப்பமனு தாக்கல் நிறைவடையவில்லை. வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தவில்லை. கூட்டணிக்கு எந்த கட்சியும் வரவில்லை. வேட்பாளர் பட்டியல் மட்டும் தயாரானது எப்படி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இப்படி எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் விஜய் நேரடியாக தேர்தலை சந்திப்பது பூஜ்ஜியம் ரிசல்ட்டாகத்தான் அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications