விஜய் கணிப்பு தப்பா போயிடுச்சே.. 2 பேருக்கு நடுவில் போட்டியில்லை? குறுக்கே வந்த அதிமுக
சென்னை: தேர்தல் பிரசாரத்தில் விஜய் சொன்னது போல் இரண்டு கட்சிகளுக்கு இடையே போட்டி இல்லாமல் மூன்று கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுவதையே காலை 10 மணி நிலவரம் காட்டியுள்ளது. காலை 10 மணி நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 103 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 71 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி தவெக 103 இடங்களிலும் அதிமுக 71 இடங்களிலும் திமுக 51 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விஜய் வியக்கத்தக்க வகையில் தனிப்பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறார். தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில் அக்கட்சியின் அலுவலகத்திற்கும் விஜய் வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக, திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது தெரிகிறது.
முன்னிலை நிலவரங்கள் மாறி மாறி வருவதால் கணிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகத்தில் இரண்டே கட்சிகளுக்கு இடையேதான் போட்டி.. ஒன்று தவெக.. இன்னொன்று திமுக என்று பேசிவந்தார். திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பிரசாரத்தில் விஜய் சொன்னது போல் இரண்டு கட்சிகளுக்கு இடையே போட்டி இல்லாமல் மூன்று கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
ஆனால், இன்றைய களத்தில் அதிமுகவும் கடும் போட்டி கொடுத்து வருகிறது. சொல்லப்போனால் திமுக அதிமுக இடையே தான் போட்டியே என்று சொல்லும் அளவுக்கு அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அனைத்திலும் தவெகவே முன்னிலையில் உள்ளது.
-
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications