ஸ்கெட்ச் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை..ராகுலுடன் சேர்ந்தால் விஜய்க்கு மெகா லாபம்! ’பிக் டீல்’ பின்னணி
சென்னை: தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழக கூட்டணி குறித்த பேச்சுகள் அதிகமாகி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் திட்டத்தை விஜய் வகுத்துள்ளதாகவும், இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் விரைவில் நேரில் பேச திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் விஜய் முதல்வர் வேட்பாளர், கேரளா, புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் வேட்பாளர்கள் என திட்டமிட்டு இந்த பேச்சு வார்த்தைகள் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.
தென்னிந்திய அரசியலில் புதிய மாற்றத்திற்கான சாத்தியம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தென்னிந்திய அளவில் ஒரு பெரிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படலாம் என்று ஒரு தகவல் உலாவுகிறது.
விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செல்வாக்கும், ரசிகர் பட்டாளமும் உள்ளது. தற்போது தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா நோக்கியும் விஜய் தனது அரசியல் பார்வையை திருப்பியுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. இதனால் தான் அவர் புதுச்சேரியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

விஜய் கூட்டணி
இந்நிலையில், கேரளா, புதுச்சேரி மாநில அரசியலுக்கு துணையாக தேர்ந்தெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தான் பரபரப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது. தவெக - காங்கிரஸ் ஆகிய இந்த இரண்டு கட்சிகளும் இணையும் சூழல் ஏற்பட்டால், வரவிருக்கும் தேர்தல்களில் தென்னிந்திய அரசியல் நிலைமை முழுவதும் மாற்றமடையும் என்ற கருத்து பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது. தற்போது வெளியான தகவலின்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா என்ற மூன்று மாநிலங்களை இலக்காகக் கொண்டு ஒரு பெரிய திட்டம் வகுக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தவெக காங்கிரஸ்
வட இந்தியாவில் சமீபகாலங்களில் சவால்களை எதிர்கொண்டுள்ள காங்கிரஸுக்கு தென் மாநிலங்களில் வலுவான கூட்டணி கிடைத்தால் அது கட்சிக்கு ஒரு பெரிய அரசியல் எழுச்சியாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் தனது கட்சியை புதிதாக ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கும், மூன்று மாநிலங்களிலும் அதிகாரத்தை தொடும் வகையில் ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற கருத்தும் உருவாகியுள்ளது.
ராகுல் காந்தி
மூன்று மாநிலங்களிலும் அதிகாரப் பங்கீடு எப்படி இருக்கும் என்ற விவகாரமும் தற்போது பேசப்படும் முக்கிய அம்சமாக உள்ளது. தவெக தரப்பிலிருந்து கசிந்த தகவலின்படி, தமிழகத்தில் தவெக முதல்வர் பதவியையும், காங்கிரஸ் துணை முதல்வர் பதவியையும் பெறும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என கூறப்படுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் முதல்வர் பதவியைப் பெற, தவெக துணை முதல்வராக இருக்கவும், கேரளாவிலும் காங்கிரஸ் முதல்வர் பதவியும், விஜயின் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும் கிடைக்கலாம் என்ற தகவல்களும் வட்டாரங்களில் பரவுகின்றன.
தென் இந்திய கூட்டணி
இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவையாக இருந்தாலும், தென்னிந்திய அரசியலில் இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து பல்வேறு தரப்புகள் கவனமாக பார்ப்பதாக தெரிகிறது. இந்த கூட்டணி நடந்தால், அது வெறும் தேர்தல் ஏற்பாடாக மட்டுமல்ல, பல மாநிலங்களின் அதிகார மையங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு பெரிய அரசியல் முயற்சியாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிகார பங்கீடு
குறிப்பாக விஜய்க்கு இது அவரது அரசியல் பயணத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்திக்கும் காங்கிரஸின் தென்னிந்திய நிலையை வலுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அவருக்கும் இது முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில், தவெக அல்லது காங்கிரஸ் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் அரசியல் தளத்தில் இந்த தகவல் தீவிரமாக பேசப்படுவதால், வரவிருக்கும் நாட்களில் இதுகுறித்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications