அதிகாரிகள் ஆட்டம்.. கட்டுப்படுத்த தவறும் முதல்வர் விஜய்.. பத்திரிகையாளர் புன்னை வளவன் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் இடையில் இடைவெளி இருப்பதாக பத்திரிகையாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தவெக ஆட்சியில் நியமன பதவிகள் தொடர்பாக தொடர்ச்சியாக மறைவு நடவடிக்கைகள் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். அதேபோல் தவெகவின் அனுபவமின்மையை அரசு அதிகாரிகள் பயன்படுத்தி முடிவு செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

தவெக ஆட்சி அமைத்த நாள் முதலே அதிகாரிகள் தனிச்சையாக செயல்படுவதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. மின்சாரத்துறை தொடங்கி பள்ளிக்கல்வித்துறை வரை அமைச்சர்களின் பேச்சிற்கும், துறை செயலாளர்களின் அறிக்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு பத்திரிகையாளர் புன்னை வளவன் நேர்காணல் கொடுத்துள்ளார்.

Vijay

இதில் பத்திரிகையாளர் புன்னை வளவன் பேசுகையில், முதல்வர் அலுவலகம் தொடர்பான டெண்டரில் முழுமை பெறாமல் வெளியிடப்பட்டது ஏன்? எந்த அதிகாரி வெளியிட்டார்? அவர் ஏன் பொறுப்பேற்கவில்லை. நேரடியாக ஒரு துறை செயலாளர்களை சந்திக்கும் ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். முதல்வர் சொல்வதற்கு மாறாக இதனை மாற்றி செய்யுங்கள் என்று துறை செயலாளருக்கு அமைச்சர் சொல்கிறார் என்றால், அந்த துறை செயலாளர் யாரிடம் சொல்ல வேண்டும்..

ஆனால் அந்த ஸ்பேஸ் இங்கு கொடுக்கப்படவில்லை. முதல்வரிடம் சொல்லப் போனால், தலைமைச் செயலாளரிடம் சொல்லுங்கள் என்பதே பதிலாக உள்ளது. முதல்வரை சந்திப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்று பலரும் சொல்ல தொடங்கிவிட்டார்கள். பவர் செண்டர் எத்தனை இருக்கிறது? எத்தனை பேருக்கு பதவி கொடுத்தார் என்பதே தெரியவில்லை.. நியமன பதவிகளுக்கான ஆணையே வெளியிடாமல் இருக்கின்றனர்.

இப்போது வரை பிரவீன் சக்ரவர்த்திக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதா என்பதே கேள்வியாக உள்ளது. ஒரு பத்திரிகையில் பிரவீன் சக்ரவர்த்திக்கு கொள்கை வகுப்பாளர் பதவி அளிக்கப்பட்டதாக சொல்கிறது. அவரும் நிர்மலா சீதாராமன், டென்மார்க் தொழிலதிபர்கள், சென்னை வளர்ச்சி குறித்த சந்திப்புகளை நடத்தி இருக்கிறார். இதனால் தவெக வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுகிறது.

அதேபோல் அதிகாரிகளை நம்பினால், மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியது வரும். அதிகாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தவெக முயற்சிக்கிறதா என்பதே தெரியவில்லை. அதிகாரிகள் முடிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். தவெகவின் அனுபவமின்மையை அதிகாரிகள் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்றார்.

இவரின் முழுமையான பேட்டியை காண ஒன் இந்தியா யூடியூப் பக்கத்தை சப்ஸ்க்ரைப் செய்து பார்க்கலாம். இந்த செய்திக்கு கீழும் நேர்காணலுக்கான வீடியோ உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+