Proud Moment! அடையாறில் தாய் தந்தையிடம் நேரில் ஆசி! பால்கனியில் தொண்டர்களுக்கு கையசைத்த விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தனது பெரம்பூர் தொகுதி வெற்றிக்கான சான்றிதழைப் பெறச் சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு விரைகிறார். முன்னதாக அடையாறில் உள்ள தாய், தந்தையை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் விஜய்.

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் விஜய் வென்றுள்ளார்.

Vijay

இந்த நிலையில் பெரம்பூரில் 1,12,127 வாக்குகள் பெற்று வென்றார். அது போல் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 62372 வாக்குகளையும், பாமக வேட்பாளர் திலகபாமா 8085 வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் வெற்றி தமிழன் 4827 வாக்குகளையும் பெற்றுள்ளனர். கருத்துக் கணிப்புகளும் பெரம்பூரில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு என சொல்லப்பட்ட நிலையில் விஜய் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

வெற்றிச் சான்றிதழ்: தனது தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ள விஜய், அதற்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து நேரில் பெற உள்ளார்.

பலத்த பாதுகாப்பு: விஜய் லயோலா கல்லூரிக்கு வருவதையொட்டி, அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் அடுக்கு பாதுகாப்பு (Heavy Police Protection) போடப்பட்டுள்ளது. முன்னதாக நீலாங்கரை இல்லத்தில் இருந்து நேராக அடையாறில் உள்ள தாய், தந்தையை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் விஜய், பின்னர் அந்த வீட்டு பால்கனியில் நின்று தொண்டர்களுக்கு கையசைத்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அவர் லயோலா கல்லூரியில் வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொள்கிறார்.

Vijay

தொண்டர்கள் உற்சாகம்: விஜய்யின் வருகையை அறிந்த தவெக தொண்டர்கள் லயோலா கல்லூரியின் நுழைவாயில் அருகே திரண்டு வருவதால், அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

வரலாற்றுத் தருணம்: தவெக 35% வாக்கு சதவீதத்துடன் தமிழகத்தின் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், விஜய் ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தனது முதல் சான்றிதழைப் பெறச் செல்வது அவரது அரசியல் பயணத்தில் ஒரு வரலாற்றுத் தருணமாகப் பார்க்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரவி கணித்தது போல, விஜய் 121 இடங்களை நெருங்கி வருவதால், இந்த வெற்றிச் சான்றிதழ் அவர் முதல்வர் நாற்காலியை நோக்கிச் செல்வதற்கான முதல் படி என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் லயோலா கல்லூரியில் படித்தவர் என குறிப்பிடத்தக்கது. அங்கு சான்றை வாங்கிக் கொண்டு தனது தாய் , தந்தை வசிக்கும் ்அடையாறு இல்லத்திற்கு விஜய் செல்கிறார் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+