14 நாள் டைம் கேட்ட விஜய்! டெல்லி ரகசிய டீலால் பறிபோகிறதா முதல்வர் கனவு? அன்புமணியின் "அந்த" முடிவு
சென்னை: அன்புமணி ராமதாஸுக்கு டெல்லி தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் ஒரு ஆஃபர், தவெக தலைவர் விஜய்யின் முதல்வர் கனவுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.. ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைத் திரட்ட விஜய் போராடி வரும் சூழலில், பாமகவின் இந்த திடீர் ரூட் மாற்றம் தமிழக அரசியலில் ஒருவித திகிலை உருவாக்கியிருக்கிறது. பாமக தரப்பு ஒருவேளை பின்வாங்கினால், அதிமுகவின் தயவை நாட வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் தள்ளப்படுவார் என்றே தெரிகிறது. அப்படியானால் இனி என்ன நடக்கும்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்காலத்திலும் இல்லாத வகையில் ஒரு அரசியல் இழுபறியைத் தோற்றுவித்துள்ளன. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தலைவர் விஜய் இப்போது ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

ஆளுநர் 14 நாட்கள் அவகாசம்
ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், இந்த இடைவெளியில் மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் ஒரு புள்ளியில் வந்து நிற்கின்றன. அந்த புள்ளிதான் அன்புமணி ராமதாஸ்.
அதிமுக கூட்டணியில் இருந்து 5 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள பாமக, இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது..
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், அன்புமணி ராமதாஸ் முன்வைப்பதாகச் சொல்லப்படும் கோரிக்கைகள் விஜய்யை நிஜமாகவே நிலைதடுமாற வைத்துள்ளதாம்.. சவுமியா அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி கேட்டுள்ளாராம்.. இது அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இருந்தாலும், அதற்கு பின்னால் இருக்கும் டெல்லியின் நகர்வுகள் தான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.
டெல்லி ரகசிய டீல்?
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு முக்கிய இடத்தைக் கொடுக்க பாஜக மேலிடம் தயாராகி வருவதாக தெரிகிறது. இது நடந்தால், அன்புமணி தமிழகத்தில் விஜய்யின் கரத்தைப் பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மாநில அளவில் ஒரு துணை முதல்வர் பதவியை விட, மத்தியில் ஒரு அதிகாரமிக்க அமைச்சர் பதவி என்பது பாமகவின் வளர்ச்சிக்கு இன்னும் வலு சேர்க்கும் என்றே அன்புமணி நினைக்கக்கூடும். இதுமட்டுமன்றி, அதிமுக - பாஜக - பாமக என்ற பழைய ஃபார்முலா மறுபடியும் பலமானால், அது விஜய்க்கு பெரிய பின்னடைவாகவே அமையும்.
அன்புமணி எடுக்கும் அந்த முடிவு?
அன்புமணியை பொறுத்தவரை, இப்போதுள்ள சூழலில் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திப்பது என்பது தற்கொலைக்குச் சமம். கண்டிப்பாக அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்..
ஆனால் பாஜக கொடுக்கும் இந்த ஆஃபர் அவருக்கு ஒரு பாதுகாப்பான பாதையை உருவாக்கி தரலாம்.. ஒருவேளை அன்புமணி இதற்கு கைவிரித்துவிட்டால், விஜய்க்கு முன்னால் இருக்கும் ஒரே ஆப்ஷன் அதிமுகவின் தயவை நாடுவதுதான்.
ஆனால், தேர்தல் களத்தில் அதிமுகவை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த விஜய், இப்போது அதிகாரத்திற்காக எடப்பாடி பழனிசாமியிடம் கையேந்துவாரா என்பது மிகப்பெரிய சந்தேகம்.
மெஜாரிட்டி - ஆப்ஷன் 2
இந்த சிக்கல் ஒருபுறமிருக்க, மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனால் ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தல் வரக்கூடும். அந்த சூழலைச் சமாளிக்கும் பலம் இப்போது தவெக-விடம் இருக்கிறதா?? என்பதும் சந்தேகம்தான்.
இப்போதைக்கு தவெக முகாமில் வெறும் அமைதியே நிலவுகிறது.. ஆளுநர் கொடுத்த டைம் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்புமணிக்கு உண்மையிலேயே டெல்லி ஆஃபர் போயிருக்கிறதா அல்லது இது விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதற்காகக் கிளப்பி விடப்பட்ட தகவலா என்பது அடுத்த தினங்களில் தெரிந்துவிடும்.
ஆனால், தற்போதைய சூழலில் விஜய் ஒரு மிகப்பெரிய அரசியல் விளையாட்டில் சிக்கியிருக்கிறார். ஏனென்றால், பாமக-வை இழுக்க அவர் போடும் கணக்குகளை விட, டெல்லி போடும் கணக்குகள் மிக வலிமையாக இருக்கின்றன.
முதல்வர் கனவு அவ்வளவுதானா
அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்பது விஜய்யின் வேகத்தைத் தடுக்க பாஜக கையில் எடுத்திருக்கும் ஒரு தந்திரமாகவே பார்க்க முடிகிறது. அன்புமணி மாநில அரசியலை விட டெல்லி அதிகாரத்தையே இப்போது பாதுகாப்பானதாகக் கருத வாய்ப்புகள் அதிகம்.
விஜய்யின் "மாற்று அரசியல்" முழக்கம் இப்போது ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறது. அதிமுகவின் ஆதரவைப் பெற்றால், அந்த மாற்று அரசியல் என்ற பிம்பம் மளமளவென உடைந்து விழும்.. ஒருவேளை அதிமுகவின் ஆதரவை பெறாவிட்டால் ஆட்சி அமைக்க முடியாது..
எனவே இந்த 14 நாட்களுக்குள் இதில் ஏதாவது ஒன்று நடந்தாக வேண்டும்.. அதுவரை விஜய்யின் முதல்வர் கனவு என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான்.. அன்புமணி எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவுதான் தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளை தீர்மானிக்கப்போகிறது... என்ன தான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications